'நல்ல நோக்கத்துக்காக விளையாடுவோம்' திட்டத்துக்கு டயலொக் ஆசிஆட்டா 11 இலட்சத்து 28000 ரூபாய் உதவித்தொகை வழங்கியது!

Published By: Vishnu

19 Mar, 2023 | 05:54 PM
image

(நெவில் அன்தனி)

பின்தங்கிய மற்றும் தேவைப்பாடுடைய பாடசாலைகளுக்கு உதவும் வகையில் 'நல்ல நோக்கத்துக்காக விளையாடுவோம்' என்ற உயரிய கொள்கையுடன் கடந்த 15 வருடங்களாக விளையாடப்பட்டுவரும் நீலவர்ணங்களின் சமரில் இந்த வருடம் 11 இலட்சத்து 28000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

றோயல் - தோமியன் நீலவர்ணங்களின் சமருக்கு கடந்த 18 வருடங்களாக தொடர்ச்சியாக பிரதான அனுசரணை வழங்கி வரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் 'நல்ல நோக்கத்துக்காக விளையாடுவோம்' திட்டத்தை 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.

இதற்கமைய போட்டியில் பெறப்படும் மொத்த ஓட்டங்களுக்கு தலா 1000 ரூபாய் வீதமும், வீழ்த்தப்படும் மொத்த விக்கெட்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதமும் 'நல்ல நோக்கத்துக்காக விளையாடுவோம்' திட்டத்துக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த வருட நீலவர்ணங்களின் சமரில் மொத்தமாக 808 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன், மொத்தமாக 32 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. 

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், 11 இலட்சத்து 28000 ரூபாய் உதவித் தொகைக்கான காசோலையை  சென். தோமஸ் முதல்வர் மார்க் பிலிமொரியா, றோயல் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க ஆகியோரிடம் டயலொக் ஆசிஆட்டா பேர்ஹாட் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய வழங்கிவைத்தார்.

இரண்டு கல்லூரிகளினதும் தலைமைகளினால் தேவைப்பாடுடைய கல்லூரிகள் இனங்காணப்பட்டு, இப்பணத்தைக் கொண்டு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும்.

இதேவேளை, நேற்று (18) சனிக்கிழமை பிற்பகல் நிறைவுக்கு வந்த 144ஆவது நீலவர்ணங்களின் சமரில் 180 ஓட்டங்களால் றோயல் கல்லூரி வெற்றிபெற்று, தனது வெற்றி எண்ணிக்கையை 36ஆக உயர்த்திக்கொண்டது.

இதனையடுத்து டி.எஸ். சேனாநாயக்க கேடயத்தை றோயல் அணித் தலைவர் தசிஸ் மஞ்சநாயக்கவிடம் சென். தோமஸ் முதல்வர் மார்க் பிலிமொரியா வழங்கினார்.

இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளையும் சேர்ந்த 2 மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா டெக்னோலொஜி கெம்ப்பஸ் - ரிசேர்ச் யூனிவேர்சிட்டியினால் தலா 3 மில்லியன் ரூபாய் விளையாட்டுத்துறை புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35