நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது - விஜித ஹேரத்

Published By: Vishnu

19 Mar, 2023 | 09:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (19)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. மாகாண சபைகளை போல் உள்ளூராட்சி மன்றங்களும் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி புதிய மன்றம் ஸ்தாபிபக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பின் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதி பகுதியில் இடம்பெற்றிருக்க வேண்டும்.விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரால் ஒருவருட காலத்திற்கு பிற்போடப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.

நிதி நெருக்கடி என்ற தர்க்கத்தை முன்வைத்துக் கொண்டு அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகிறது.பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுவிக்காமல் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை மதிக்காமல் செயற்படுகிறார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான குழுவுக்கு அமைக்க ஆளும் தரப்பு அவதானம் செலுத்தியுள்ளது.நீதிபதிகளை விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு கிடையாது.நீதிமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகள் பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள்,நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நீதிபதிகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07
news-image

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய...

2026-07-21 13:32:38