கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

Published By: Vishnu

19 Mar, 2023 | 12:51 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரமநாந்த மாவத்தை பிரதேசத்திலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதுடைய பரமநாந்த மாவத்தை கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தனது முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அதன் திருத்த வேலையை மேற்கொள்வதற்காக குறித்த பகுதியிலுள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08