வவுனியாவில் 3 வீடுகளில் தொடர் திருட்டு : இருவர் மீது தாக்குதல்

Published By: Vishnu

19 Mar, 2023 | 10:34 AM
image

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்திற்குள் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு புகுந்த திருடர்கள் இன்று (19) அதிகாலை மூன்று மணிவரையிலும் மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 

கள்ளிக்குளம் கிராமத்தில் 18 ஆம் திகதி இரவு 11மணியளவில் வயோதிபர் வசிக்கும் வீடு ஒன்றிற்குள் உருமறைப்புச் செய்துகொண்டு உள் நுழைந்த திருடர்கள் சிலர் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றித்தருமாறு அச்சுறுத்தி பறித்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் குறித்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு அவரின் குரலில் வீட்டில் வசித்தவர்கள் அழைத்துள்ளனர். 

கதவைத் திறந்தபோது அவ்வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அவர்கள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகளையும் பதினெட்டாயிரம் ரூபா பணம் என்பனவற்றை அங்கு திருடிக்கொண்டு சற்றுத் தொலைவிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இரு சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் வீட்டிலும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

எனினும் இரண்டாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது மாமடு பொலிசாருக்கு கிராம மக்களினால் அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்திற்குப் பொலிசார் வருகை தரவில்லை. 

அதிகாலை மூன்றாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று இரு சகோதரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றபோது கிராம மக்கள் 119 க்கு அழைப்பு ஏற்படுத்தி முறையிட்ட பின்னரே இன்று அதிகாலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகளிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின்போது திருடப்பட்ட தங்க நகைகளின் விபரம் சரியான மதிப்பீடு செய்யப்படவில்லை. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-28 14:15:37
news-image

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம்...

2023-03-28 14:16:44
news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03