அரசாங்கத்தில் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை - நாமல் ராஜபக்ஷ

Published By: Nanthini

18 Mar, 2023 | 10:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஜனாதிபதி ஸ்தாபிக்காமல் இருப்பது குறித்து பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தான் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (17) பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.

மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மாகாண நிர்வாக கட்டமைப்பில் பாரிய சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன. 

ஆகவே, பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் இருப்பதால் பிரதேச மட்டத்தில் சேவைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நிலையான அமைச்சரவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. 

ஆகவே, நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச்...

2023-03-23 15:59:03
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34