Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் Daraz

18 Mar, 2023 | 04:53 PM
image

பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ள நிலையில், பெண்கள் தங்கள் பிள்ளைகள் அல்லது அவர்களது குடும்ப உறவினர்களுக்கு சம்பளம் இன்றி வீட்டில் பராமரிப்புப் பணிகளைச் செய்யும் அதேவேளை வருமானம் ஈட்டுதல்  சுமையும் உள்ளதால் இரட்டைச் சுமைகளை சுமக்க வேண்டியுள்ளது. இது பல பெண்கள் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கு வழிவகுத்தது, இது அவர்களுக்கு ஒரு அளவிலான நெகிழ்வுத்தன்மையையும் தங்கள் குடும்பங்களுக்கு தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது.

இந்த அழுத்தமான தேவையை கண்டறிந்து, சமூக பொறுப்புடன் கூடிய அமைப்பாக, Daraz Express  விநியோக பங்காளர்களாக பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்பை வழங்கி வருகிறது. Daraz Express  வழங்கும் கல்வி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் விளைவாக வேலை-வாழ்க்கை இரண்டினதும் சமநிலை பேணப்படுவதனால் ஈர்க்கப்பட்ட பல்வேறு சமூக அடுக்குகளில் உள்ள பல பெண்கள், எங்கள் பெண் விநியோக வீராங்கனைகளாக மாறியுள்ளனர்.

2023 சர்வதேச மகளிர் தினத்தன்று, Daraz மூலம் வலுவடைந்த இந்த இரண்டு பெண் விநியோக ஹீரோக்களுடன் நாங்கள் உரையாடினோம். தங்களின் கதைகளை எங்களிடம் கூறும்போது, ஏனைய விநியோக சேவைகளை விடுத்து Daraz  Express உடன் ஏன் இணைந்தார்கள் என்பதனையும் மற்றும் அந்த பணி தங்கள் வாழ்க்கையில் சேர்த்த மதிப்பையும் னுயசயண நுஒpசநளள உடன் பணிபுரியத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை விளக்கினர்.

மனோரி சாந்தனி பீரிஸ், பத்தரமுல்லைச் சேர்ந்த 46 வயதான தய் ஒருவர் அவர் தனது 22 வயது மகளையும் கவனித்து வருகிறார். மேலும் அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேறு போட்டி விநியோக சேவையில் ஓட்டுநராக இருந்து Daraz  உடன் பணியாற்றத் தொடங்கினார்.

நுகேகொடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகங்களை மேற்கொண்டு, மனோரி 2022 இல் 11.11 சீசனில் நாடளாவிய ரீதியில் அதிகமான விநியோகங்களை மேற்கொண்டு உயர்நிலையை அடைந்தார். அடிக்கடி வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்வதையும், விநியோகம் செய்யும் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் அடையாளங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதும் அவர் வெற்றிக்கான திறவுகோலாகக் கருதுகிறார்.

கடந்த 18 மாதங்களில் Daraz Express  உடனான தனது அனுபவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பணிபுரியும் சௌகரியத்தன்மை, EPF மற்றும் ETFக்கான தகுதி மற்றும் எரிபொருள் கொடுப்பனவு ஆகியவையே தனது முந்தைய தொழில்தருநரை  விட னுயசயண Daraz Expressஐ விரும்புவதற்கு முக்கியக் காரணங்களாகக் காட்டுகிறார்.

மனோரி Daraz Express உடன் பணிபுரியும் அதேவேளை ஒரு கேட்டரிங் சேவையை நடத்துகிறார் மற்றும் ஆடை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் ஈட்டும் பல வருமான ஆதாரங்கள் தனது மகளுக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யும் தனது வாழ்க்கை இலக்கை அடைய உதவும் என்று அவர் நம்புகிறார்.

“பெண்கள் அச்சமின்றி இருக்கவும், ஒருபோதும் சோர்ந்து போகாத மனப்பான்மையுடன் வாழ்க்கையை அணுகவும் ஊக்குவிக்க விரும்புகிறேன். எமது நிதிச் சுதந்திரம் மற்றும் எமது குடும்பங்களின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான புதுமையான வருமான ஆதாரங்களைப் பற்றி நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும்," என்று அவர் சர்வதேச மகளிர் தினத்தில் இலங்கைப் பெண்களுக்கு தனது ஆலோசனையாக கூறுகிறார்.

34 வயதான ஷமிலா நூர், தெமட்டகொடவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அவர் தனது தாய் மற்றும் மூன்று சகோதரிகளை பராமரிக்கிறார். போட்டி விநியோக சேவையுடன் முன்பு பணிபுரிந்த அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு Daraz  இல் இணைந்ததிலிருந்து தனது வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் கண்டார்.

தனது நிதிப் பொறுப்புகளை நிர்வகிப்பதற்கும் வசதியான வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்கும் போதுமான நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு Daraz   ஐ விரும்புவதாக ஷமிலா கூறுகிறார். EPF மற்றும்  ETFக்கான தகுதி மற்றும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பணிபுரியும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் எதிர்காலத்தில் Daraz உடன் விநியோகங்களைத் தொடரும் அவரது முடிவிற்கு பங்களித்துள்ளது. Daraz Express உடன் பணிபுரியும் அதேவேளை, அவர் மெஹந்தி கலையை கற்றுக்கொள்வதற்கும், ஆடை தயாரிப்பில் ஈடுபடுவதற்கும், பகுதிநேர கேக் தயாரிக்கும் தொழிலை நடத்துவதற்கும் ஒரு வகுப்பில் கலந்துகொள்ள அவருக்கு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அதனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

 “நான் ஒன்லைன் கேக் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்து தொழில்முறை மெஹந்தி கலைஞராக மாற விரும்புகிறேன். ஒரு நாள், நான் ஒரு வீட்டைக் கட்டி, என் அம்மாவுக்கு வசதியான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன்.”என்று ஷமிலா தனது எதிர்கால திட்டங்களைப் பற்றி கூறுகிறார்.

ஷமிலாவை சுதந்திரமாக இருக்கவும், தனி நபராக இருப்பதினால் சமூக அழுத்தங்கள் இருந்தபோதிலும் னுயசயண உடன் பணிபுரிவது அவரை வலுப் பெறச் செய்துள்ளது. எனவே, சமூகத்தால் விதிக்கப்பட்ட பாரம்பரிய தடைகளை உடைத்து, நிதி சுதந்திரத்தின் மூலம் அவர்களின் கனவுகளைப் பின்பற்ற ஏனைய  பெண்களையும் அவர் ஊக்குவிக்கிறார்.

மனோரி மற்றும் ஷமிலா போன்ற பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை அடையவும், அவர்களின் கனவுகளை அடைவதற்கு உழைக்கவும் Daraz Express உதவுகிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், இந்த கடினமான காலங்களில் இலங்கையின் பெண்களுக்கு வலுவூட்டும் எங்கள் முயற்சியைத் தொடரவும், அவர்கள் தங்கள் சொந்தக் காலில் தலை நிமிர்ந்து நிற்க உதவவும் உறுதியளிக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32