சமூக கலாசாரம் காக்கும் பொறிமுறை அவசியம்

Published By: Digital Desk 5

18 Mar, 2023 | 04:53 PM
image

(அ. நிவேதா)

ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் இலங்கை பெயர் பெற்றுவிளங்குகிறது.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக ஒருசில சகிக்கத்தகாத சம்பவங்கள் பதிவாகி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காலம் மாறினாலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் தமது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் அதன் நாகரிகங்களையும் பாதுகாப்பதற்கு இயன்றவரை போராடிவருகின்றன.

என்னதான் நாகரிக வளர்ச்சியை நாம் கண்டாலும் கூட ஒருசில விடயங்களில் இருந்து எம்மால் வெளிவர முடிவதில்லை. அதில் தாம்பத்தியம் என்பது மனித வாழ்வின் அற்புதமான பாகம். இதனை எல்லா மதங்களும் மத கோட்பாடுகளின் கீழ் சடங்குகள் என்ற பெயரில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன்பால் மனிதர்கள் செயற்பட வேண்டுமென்ற கட்டுப்பாட்டை வகுத்துள்ளன. 

ஆனாலும்கூட நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் எமது கலாசாரமும் படிப்படியாக சீர்குலைந்து செல்வது வேதனைக்குரியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. ஒருசிலரின் நடத்தைகள் ஒட்டமொத்த சமூகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திவிடுகின்றது. 

இதற்கு விளம்பரம் அளித்தாற்போன்று இலங்கையில் கடந்த வாரம் இளம் தம்பதியொன்று பிறந்து 10 நாட்களேயான சிசுவொன்றை கொழும்பிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்றிருந்தனர். அதன்பின்னர் குறித்த தம்பதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த தம்பதி திருமணமா காமல் குடும்பம் நடத்தியமை தெரியவந் ததுடன் யாரேனும் குழந்தையை எடுத்து வளப்பார்கள் என்று எண்ணியே அவ்வாறு விட்டுச் சென்றதாக வாக்கு மூலத்தின்போது தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்களை விசாரணை செய்த பண்டாரவளை பொலிஸ் பரிசோதகரின் விசாரணை முறையற்ற விதத்தில் இருந்ததாக முறைப்பாடு வெளியானதை தொடர்ந்து பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர், குறித்த பொலிஸ் அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொண்டனர். 

இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பில் பலரும் பொதுவெளியில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

ஒருபுறம் இந்த தம்பதியை விமர்சனம் செய்தாலும்கூட மறுபுறம் அவர்களை விசாரித்த முறைமை தொடர்பில் விமர்சிக்கின்றனர். இந்த தம்பதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என்றாலும்கூட அவர்களது இந்த தீர்மானத்தின் பின்புலம் தொடர்பில் சமூக அக்கறை என்ற அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

இப்படியொரு சம்பவம் இலங்கையில் இன்று நேற்று நடந்தேறிய விடயமன்று. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிகின்றோம். 

என்னதான் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்க சமூக அமைப்புக்கள் முன்வந்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்ப டுத்த முடியாதுள்ளது. 

அதற்காக இவற்றை அப்படியே விட்டுவிட முடியாது. கலாசாரத்துக்கு பெயர் பெற்றுவிளங்கும் இலங்கையில் இதுபோன்ற  சம்பவங்கள் அதிகரித்து செல்லுமாக இருந்தால் எதிர் காலங்களில் எமது நாட்டின் நிலை கேள்விக்குறியாகிவிடும். 

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இலங்கையின் பாரம்பரியத்தை விலைபேசி விற்றுவிட முடியாது. எனினும் இவற்றை மாற்றியமைப் பதற்கான பொறிமுறையொன்று அவசியம் என்பதையே சமூக ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

அதற்கு வலுசேர்த்தாற்போன்று இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவின் கருத்து அமைந்துள்ளது. அதாவது குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்க்க முடியாத பட்சத்தில் அல்லது கைவிடப்பட்ட குழந்தைகளை பொறுப்பேற்பதற்கான பிரத்தியேக ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார். 

மேலும் குறித்த தம்பதியினரை பொலிஸார் விசாரித்த முறைமையை அடிப்படையாக கொண்டும் அவர் தமது கருத்தை தெரிவித்துள்ளார். 

அதாவது, மேற்கத்தேய நாடுகளின் கலாசாரம் வித்தியாசமானது. அங்கு விரும்பியவர்களுடன் திருமண வாழ்க்கையை நடத்த முடியும். அதற்கு அப்பால் கூடி வாழ்தல் என்ற கட்டமைப்பின் கீழ் அங்குள்ள தற்கால இளைஞர், யுவதிகள் வாழ ஆரம்பித்துவிட்டார்கள். 

இதனூடாக பிறக்கின்ற குழந்தைகளை அவர்களது செலவில் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் ஊடாக வளர்க்கின்றார்கள். இல்லையேல் குழந்தை பராமரிப்பு நிலையங்களில் விட்டுச் செல்கின்றனர். அதனை அந்த சமூகமும் ஏற்றுக்கொள்கின்றது. 

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அவ்வாறான நிலைமை இல்லை. மாறாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் விமர்சனங்களும் சிலநேரம் கரடுமுரடானதாக அமைந்துவிடுகின்றன. 

இதுபோன்ற காரணங்களால்தான் இவ்வாறான உறவுமுறையில் பிறக்கின்ற குழந்தைகளை அநாதரவாக விட்டுச் செல்லவேண்டிய நிலைக்கு தற்கால இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த கூற்று மறைமுகமாக மேற்கத்தேய கலாசாரத்தை வரவேற்பதாகவும் இலங்கையிலும் இந்த கலாசாரத்தின் ஊடுறுவல் அவசியமென்பதையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. 

உதயகுமார அமரசிங்க 

மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற் பதற்கான நிலையம் ஒன்றை ஸ்தாபிப் பதற்கான யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் பல நாட்டில் பதிவாகியிருந்த நிலையில், அவை தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 13 ஆம திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

மேற்குலக நாடுகளில் வைத்தியசா லைகளில் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். குழந்தைகளை தம்மால் வளர்க்க முடியாது எனக் கருதும் பட்சத்தில் அந்த நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தகவலும் வெளியிடப் படாமல் குழந்தைகளை வைத்தியசாலை யில் ஒப்படைக்க முடியும். அவ்வாறானதொரு முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரமொன்று இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபையினால் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்து, 'கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்' என்பதை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

தாய் அல்லது தந்தையின் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மாகாண மட்டத்தில் மாகாண வைத்தியசாலைகளை அண்மித்து இவற்றை ஸ்தாபிப்பதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டது. இந்த யோசனை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக 2022 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பில் அமைச்சரவையுடன் தொடர்புடைய சட்ட அதிகாரியினால் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவ்விடயம் நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரித்துடையது என்பதால் அதன் ஊடாக இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைப்பது உகந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான பொறுப்பு வேறு நிறுவனங்களுக்கு காணப்பட்டாலும், அரசாங்கத்துக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எம்மால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

அதற்கமைய மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த யோசனையை மீள சமர்ப்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும்  திமிங்கலங்களுக்கு தீனி கொடுப்பதாக இது அமைந்துவிடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட தர்ப்பினரின் முன்னெடுப்புக்கள் தெளிவானதாக அமைய வேண்டும். 

வறுமை, கணவன் அல்லது மனையின் துணையின்றி வளர்க்கப்படுகின்ற பிள்ளைகள், உறவினர்களின் தயவிலுள்ள பிள்ளைகள், ஆதரவற்று வீதிக்குவரும் நிலையிலுள்ள பிள்ளைகள் போன்றோருக்கு இதுபோன்ற பொறிமுறைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். எனினும் மேற்குறிப்பிடப்பட்ட தம்பதியினரை போன்று  விழிப்புணர்வின்றி செயற்படுகின்றவர் களையும் இந்த திட்டங்களுக்குள் உள்வாங்குவது தொடர்பில் பொருத்தமான வழிமுறைகள் அவசியமாகும். 

காரணம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் இளம் வயது பருவத்தினர். ஆக, இவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருக்கக்கூடும். இருந்தும்கூட இவர்கள் குழந்தையை அநாதரவாக கைவிட்டு செல்வதென்பது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற முறையற்ற உறவுகளால் பிரசவிக்கப்படுகின்ற குழந்தைகளை பொறுப்பேற்கும் பட்சத்தில் குழந்தையின் முழுப் பொறுப்பையும் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சம்பந்தப்பட்ட தாயும் தந்தையுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும்.

அதேசமயம் தங்களது தவறு என்னவென்பதை உணரும் வகையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களது கருத்தாக அமைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...

2023-03-28 14:27:24
news-image

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்

2023-03-28 11:19:02
news-image

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...

2023-03-27 16:02:07
news-image

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...

2023-03-27 17:26:44
news-image

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...

2023-03-27 16:47:22
news-image

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ;...

2023-03-27 12:40:26
news-image

அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி

2023-03-27 09:49:11
news-image

நீளும் ஆக்கிரமிப்புக்குள் வீணான நல்லிணக்க முயற்சி

2023-03-26 20:41:52
news-image

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’ 

2023-03-26 20:40:16
news-image

இந்திய வடமேற்கு அழுத்தம் 

2023-03-26 20:37:47
news-image

வல்லரசுகளின் பலப்பரீட்சை

2023-03-26 20:36:35
news-image

ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்

2023-03-26 18:10:29