எதிரிகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள மனிதர்களை போல விலங்குகளும், பறவைகளும் பல வீர தீர செயல்களை செய்வது வழமை.
அந்தவகையில், கொக்கு தன்னை பாதுகாத்து கொள்ள முதலையை விரட்டி அடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் உலாவி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சரசோட்டா நகரில் லாரா அகின் பகிர்ந்த காணொளியில், கரையின் உச்சியில் உள்ள புல் வெளியில் ஒரு கொக்கு நின்று தண்ணீரிலிருந்து மெதுவாக வெளிவரும் முதலையைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
அதாவது, புல் வெளியில் பெரிய கொக்கு ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அப்போது தண்ணீரிலிருந்து புல் வெளியை நோக்கி முதலை ஒன்று நகர்ந்து வருகிறது.
கொக்கு இறக்கைகளை விரித்து பின்நோக்கி நகர்ந்து முதலையை பார்த்து கொண்டிருந்தது.
பின்னர் இறக்கைகளை மடித்து குரல் எழுப்புகிறது. முதலை கொக்கை வேட்டையாட பார்க்கிறது.
நீண்ட நேரப் போட்டிக்குப் பிறகு, முதலை நகர்கிறது. கொக்கு உடனடியாக அதன் இறக்கைகளை விரிக்க முதலை விரைவாக திரும்பி தண்ணீருக்குள் செல்கிறது. எனவே, இந்த போராட்டத்தில் கொக்கு வெற்றி அடைந்தது.
மாநிலத்தில் சுமார் 1.3 மில்லியன் முதலைகள் உள்ளதாகவும், அவைகள் வாழக்கூடிய சாத்தியமான காட்டுப் பகுதிகளில் உள்ள 67 மாவட்டங்களில் வாழ்கின்றன என புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM