யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

18 Mar, 2023 | 04:51 PM
image

எம்மில் பெரும்பாலானவர்கள் கணினி திரை முன் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். அதிலும் கண் இமைகளை முறையாக பயன்படுத்த தவறி, கண் வறட்சி பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள்.

இந்நிலையில் எம்மில் சிலருக்கு திடீரென கண் சிவத்தல், கண் வலி, மங்கலான பார்வை, பார்வை குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும். இதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

எம்முடைய கண்களில் அமையப்பெற்றுள்ள சுவர்களின் இடையே இருக்கும் திசுக்களின் அடுக்குகளில் நடுப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால்... அவற்றை மருத்துவ நிபுணர்கள் யுவைடிஸ் எனும் கண் அழற்சி பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள். இவை சிலருக்கு ஒரு கண்ணிலும் அல்லது இரண்டு கண்ணிலும் ஏற்படக்கூடும். கண் சிவந்து போவது, கண் வலி.. போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தியும், ஏற்படுத்தாமலும் இவை உண்டாகும். மேலும் இந்த பாதிப்பு ஆண், பெண் என பாலின பேதமின்றி, அனைத்து வயதினரையும் தாக்கக்கூடும்.

நோய் தொற்று அல்லது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே திருப்பித் தாக்கக்கூடிய நிலை போன்ற காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வை இழப்பு ஏற்படக்கூடும்.

இத்தகைய பாதிப்பை மருத்துவர்கள் கண்ணின் முன்புறம் மற்றும் கண்ணின் பின்புறம் என எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையை வழங்குகிறார்கள். இதன் போது ஸிலிட் லேம்ப் பரிசோதனை, டோனோமேட்ரி பரிசோதனை, சாதாரண கண் பரிசோதனை, ஃப்ளோரசின் ஒஞ்சியோகிராபி, ரத்த பரிசோதனை, கண்ணில் உள்ள விட்ரெஸ் திரவ பரிசோதனை போன்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பர். இத்தகைய பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பிற்கு விட்ரக்டமி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

டொக்டர் பிரசாந்த்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36