வில்லியம்சன், நிக்கல்ஸ் இரட்டைச் சதங்கள் குவித்து அசத்தல், நியூஸிலாந்து 540 - 2 விக். டிக்ளயார்ட்

Published By: Digital Desk 5

18 Mar, 2023 | 03:12 PM
image

(நெவில் அன்தனி)

வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கல்ஸ் ஆகியோர் குவித்த இரட்டைச் சதங்களுடன் நியூஸிலாந்து 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று சனிக்கிழமை (18) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 580 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதேவேளை ஹென்றி நிக்கல்ஸ் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களிலிருந்தும் ஹென்றி  நிக்கல்ஸ்   18 ஓட்டங்களிலிருந்தும் தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களை மிக இலகுவாக எதிர்கொண்ட இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி சரமாறியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 363 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மதிய போசன இடைவேளைக்கு முன்னர் தனது சதத்தைப் பூர்த்திசெய்த கேன் வில்லியம்சன், தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். 296 பந்துகளை எதிர்கொண்ட  வில்லியம்சன்  23 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 215 ஓட்டங்களைக் குவித்தார்.

ஹென்றி நிக்கல்ஸ் 240 பந்துகளில் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

வில்லிம்சன் 6ஆவது இரட்டைச் சதத்தையும் நிக்கல்ஸ் முதலாவது இரட்டைச் சதத்தையும் குவித்தனர். 

டெரில் மிச்செல் 17 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

சீரற்ற காலநிலையினால் 3 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பித்த முதலாம் நாள் ஆட்டத்தில் டொம் லெதம் 21 ஓட்டங்களுடனும் டெவன் கொன்வே 78 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்திருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 86 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஓஷத பெர்னாண்டோ 6 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர்.

திமுத் கருணாரட்ன 16 ஓட்டங்களுடனும் 2ஆவது தொடர்ச்சியான டெஸ்டில் இராக்காப்பாளனாக களம் நுழைந்த ப்ரபாத் ஜயசூரிய 4 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11
news-image

சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான...

2023-03-26 20:42:41
news-image

அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி...

2023-03-26 10:52:19
news-image

நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி:...

2023-03-25 15:08:38
news-image

ஒருநாள் போட்டியிலும் சென் தோமஸ் அணியை...

2023-03-24 20:36:06
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே...

2023-03-24 17:06:36