'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

18 Mar, 2023 | 04:49 PM
image

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் 'அகநக..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து பாரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பொன்னியின் செல்வன்1'. முதல் பாகத்தின் வரவேற்பை கண்டு உற்சாகமடைந்த பட தயாரிப்பு நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு திகதியை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. எதிர் வரும் ஏப்ரல் 28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் 'அகநக ..' எனத் தொடங்கும் முதல் பாடல் மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று மாலை 6:00 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் தயாராகி வெளியாகவிருக்கும் இந்தப் பாடலை கேட்கவும்.. காணவும்.. உலகம் முழுதும் தமிழர்களும், திரையிசை ஆர்வலர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right