இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக அவதாரமெடுத்திருக்கும் விஜய் அண்டனி, அவரது இயக்கத்தில் தயாராகும் 'பிச்சைக்காரன் 2' எனும் திரைப்படத்தில் 'பிகிலி' எனும் புதிய சொல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதனை முதன்மையாக்கி பாடல் ஒன்றையும்.. காணொளி ஒன்றையும்.. பிரத்யேகமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'பிச்சைக்காரன்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதில் கதையின் நாயகனாக நடித்த விஜய் அண்டனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா தாப்பர் நடித்திருக்கிறார். இவர்களுடன் டத்தோ ராதா ரவி, வை. ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, ஜோன் விஜய், யோகி பாபு, தேவ் கில் உள்ளிட்ட பலர் நடுத்திருக்கிறார்கள். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கார்ப்பரேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் நான்கு நிமிட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றது. தற்போது இப்படத்தில் 'பிகிலி' எனும் ஒரு புதிய சொல்லை விஜய் அண்டனி அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த வார்த்தையை மையப்படுத்தி பாடல் ஒன்றையும் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டிருக்கிறார். இந்த வார்த்தை எதற்காக... எப்போது... யாருக்காக.. பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் விவரித்திருப்பதால்.. ரசிகர்கள் இதனை ஆதரித்து வருகிறார்கள். விஜய் அண்டனியின் புதுவித பாணியிலான விளம்பர உத்தி, திரையுலகினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM