பதுளை நோக்கி பய­ணிக்க இருந்த தபால் ரயிலில் குண்டு உள்­ள­தாக அண்­மையில் பொலிஸ் அவ­சர பிரி­வுக்கு தகவல் கொடுத்த 18 வய­தான யுவ­தியை கோட்டை பொலிஸார் நேற்று கைது செய்­தனர். 

பொய்­யான தக­வலைக் கொடுத்து புர­ளியைக் கிளப்­பி­யமை தொடர்­பி­லேயே கட­வத்தை, கிரிந்­தி­வல - வத்­து­ரு­கம பகு­தியைச் சேர்ந்த யுவ­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

கைது செய்­யப்­பட்ட மேற்­படி யுவதி நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட  நிலையில் 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல நீதிவான் அனு­ம­தித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு கோட்­டையில் இருந்து பதுளை நோக்கி இரவு 8.00 மணிக்கு பய­ணிக்க தபால் ரயில் தயா­ராக இருந்­துள்­ளது.

இதன் போது 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு குறித்த ரயிலில் குண்டு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கோட்டை பொலிஸார் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் குண்டு செய­லி­ழக்கும் பிரி­வுக்கும் அறி­வித்து குறித்த ரயிலை சிறப்பு சோத­னைக்கு உட்­ப­டுத்­தினர்.

ரயிலில் இருந்த ஒவ்­வொ­ரு­வ­ரையும் சோதனைச்  செய்த பொலிஸார் அவர்­க­ளது பயணப் பொதி­க­ளையும் சோதனை செய்­தனர். இதன் போது அங்கு குண்டோ அல்­லது சந்­தே­கத்­துக்கு இட­மான பொரு­ளொன்றோ இருக்­க­வில்லை என்­பது உறு­தி­யா­னது.  இந் நிலையில் ரயிலை மாளி­கா­வத்தை ரயில் தரிப்­பி­டத்­துக்கு கொண்டு சென்று சிறப்பு பயிற்­சி­ய­ளிக்­கப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்­களின் உத­வி­யு­டனும் சிறப்பு சோதனை நடத்­தப்பட்­டது.

 எனினும் அந் நட­வ­டிக்­கையின் போதும் குண்டு ஏதும் இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து குறித்த ரயி­லா­னது சுமார் 2 மணித்­தி­யா­லங்கள் மற்றும் 45 நிமி­டங்கள் வரை தாம­த­மாகி இரவு 10.45 மணிக்கு கோட்­டையில் இருந்து பய­ணத்தை ஆரம்­பித்­தது.

இந் நிலையில் இது தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்த கோட்டை பொலிஸார் 119 அவ­சர தொலை­பே­சிக்கு தகவல் வழங்­கி­யது யார் என்­பதைக் கண்­ட­றிந்­தனர். அதன்­படி குறித்த 18 வய­தான யுவ­தியை அழைத்து பொலிஸார் விசா­ரணை செய்­துள்­ளனர்.

இதன் போது தான் ரயில் நிலை­யத்தில் நின்­ற­போது, தொலை­பே­சியில் ஒருவர் யாருக்கோ ரயிலில் குண்டு வைக்­கப்பட்­டுள்­ள­தாக தெரி­வித்­த­தா­கவும் அத­னை­ய­டுத்தே தான் பயத்தில் பொலி­ஸா­ருக்கு அழைத்­த­தா­கவும் வாக்குமூலம் அளித்­துள்ளார். 

எனினும் மேல­திக விசா­ர­ணை­களில் குறித்த யுவ­தியின் காத­ல­னுடன் ஏற்­பட்ட பிரச்­சி­னையை அடுத்து, காத­லனை அவ­ரது ஊருக்கு செல்ல விடாது தடுக்­கவே மேற்­படி யுவதி ரயி­லில்­குண்டு இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு போலி­யாக தகவல் கொடுத்­துள்ளார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அதன்­ப­டியே நேற்று காலை 10.00 மணிக்கு கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு குறித்த யுவ­திக்கு அறி­விக்­கப்பட்­டது. இந் நிலையில் விசா­ர­ணைக்­காக கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரான யுவ­தியை பொலிஸார் கைது செய்து நேற்று பிற்­பகல் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர்.

இதன் போது சந்­தேக நப­ரான யுவ­தியை இவ்­வா­றான புரளிகள் குறித்து கடுமையாக எச்சரித்த நீதிவான் அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.