இலங்கையின் ஆட்சியாளர்கள் நீதித்துறையின் சுயாதீன தன்மையை மதிக்க வேண்டும் என இங்கிலாந்து வேல்சின் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து நீதிபதிகள் நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என வேண்டுகோள் வெளியாகியுள்ள நிலையிலேயே இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கையின் உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் 2023 மார்ச் 19 ம் திகதி இடம்பெற்றிருக்கவேண்டும் இலங்கை நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தின் மூலம் நிதியை தேர்தலிற்காக ஒதுக்கீடு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைக்குழு நிதிக்காக வேண்டுகோள் விடுத்த போதிலும் அவை மறுக்கப்பட்டுள்ளன என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம தெரிவித்துள்ளது.
2023 மார்ச் 3ஆம் திகதி மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு திறைசேரி செயலாருக்கு வழங்கிய இடைக்கால உத்தரவில் உள்ளுராட்சி தேர்தலிற்கான நிதியை வழங்குவதை நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மூன்று நீதிபதிகளின் நடவடிக்கையை நாடாளுமன்றத்தின் ஒழுக்காற்று சிறப்புரிமை குழுவிடம் பாரப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார் என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒழுக்காற்று சிறப்புரிமை குழுவின் விசாரணை முடிவடைவதற்கு முன்னர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடும் குற்றம் என இலங்கையின் இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார் என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் என தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிற்கும் உத்தரவிடவேண்டும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஏன இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 22ஆம் திகதி நாடாளுமன்றத்தின் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிப்பதற்காக இடைக்கால உத்தரவின் நகல் வடிவத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தின் பதிவு பிரிவிடம் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதும் கண்காணிப்பதும் அரசாங்கத்தினதும் ஏனைய ஸ்தாபனங்களினதும் கடமை என நீதித்துறையின் சுயாதீன தன்மை குறித்த ஐநாவின் அடிப்படை கொள்கைகள் தெரிவிக்கின்றன என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீதித்துறை செயற்பாடுகளின் தேவையற்ற பொருத்தமற்ற தலையீடுகள் இருக்ககூடாது நீதித்துறையின் தீர்மானங்களை மாற்றமுடியாது எனவும் ஐநா தெரிவித்துள்ளது என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM