அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான காலம் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிவரை குறித்த ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை  சீன மெர்ச்சன்ட்ஸ் துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், குறித்த திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.