ஸ்போண்டிலோஒர்த்ரைடீஸ் எனும் முதுகுத்தண்டு வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

18 Mar, 2023 | 12:21 PM
image

பணிச்சுமையின் காரணமாக எம்மில் பெரும்பாலானவர்களுக்கும் கழுத்து வலி, முதுகு வலி என்பது இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு கட்டாய பரிபூரண ஓய்வெடுத்தால், வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

அதே தருணத்தில் காலையில் எழுந்தவுடன் கீழ்ப்பக்க முதுகு வலி, விடியற்காலையில் பின்பக்க பகுதியில் வலி ஏற்பட்டால்... அவை முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பின் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

கடந்த தசாப்தங்களில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் இத்தகைய பாதிப்பு அதிகம் என்று அறிவறிக்கை தெரிவித்தாலும், தற்போதைய சூழலில் இளம் வயது மற்றும் மத்திம வயதுள்ள ஆண், பெண் என இருவருக்கும் இத்தகைய முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் போது எக்ஸ் ரே, ஸ்கேன், இரத்த பரிசோதனை போன்றவற்றின் மூலம் முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பு, ஒக்ஸியல் ஸ்போண்டிலோஒர்தரைடீஸா அல்லது ரேடியோகிறாஃபிக் ஒக்ஸியல் ஸ்போண்டிலோஒர்தரைடீஸா என்பதனை அறிந்து, அதற்கேற்ற நிவாரண சிகிச்சைகளை வழங்குவர்.

இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளை உடனடியாக அவதானித்து சிகிச்சை பெறாவிட்டால், இதன் காரணமாக கண் வீக்கம், இதய பாதிப்பு, முதுகுத்தண்டு எலும்பு முறிவு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

டொக்டர்: ஷாம்
தொகுப்பு: அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவை...

2023-03-28 17:09:25
news-image

தொடக்க நிலையிலான ஆட்டிசம் பாதிப்பிற்கு முழுமையாக...

2023-03-27 14:17:26
news-image

வாந்தி - Vomiting

2023-03-25 12:03:56
news-image

அறைகளில் மணமூட்டியை பயன்படுத்தலாமா..?

2023-03-24 15:29:53
news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01
news-image

ஸ்போண்டிலோஒர்த்ரைடீஸ் எனும் முதுகுத்தண்டு வீக்க பாதிப்பிற்குரிய...

2023-03-18 12:21:25
news-image

கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-16 15:32:11
news-image

இன்சுலினை ஆயுள் முழுதும் பயன்படுத்த வேண்டுமா...?

2023-03-15 14:52:57