மணமான தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 'பித்ரி கண்டாந்தம்'

Published By: Ponmalar

18 Mar, 2023 | 11:02 AM
image

இன்றைய கால சூழலில் திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் முறைப்படி பெற்றோர்களின் ஆசியுடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களுடனும்..

மகிழ்ச்சியான மற்றும் சூட்சும நிறைந்த சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்து கொள்வதில் பெருவிருப்பம் கொள்வதில்லை. திருமணத்திற்கு முன்பே காதலிக்க தொடங்குகிறார்கள். காதலிக்கும் போதே எல்லை மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களும்.. சாந்தி முகூர்த்தத்தை நாள், நட்சத்திரம் பார்த்து அமைத்துக் கொள்வதில்லை. திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக் கொள்வதில் திட்டமிடுகிறோம் என்று கூறி, கரு கலைப்பில் ஈடுபடவும் தயங்குவதில்லை.

இவை அனைத்தும் இன்றைய திகதியில் பெண்மணிகள் கால சூழல் கருதி மனம் விரும்பியும்.. மனம் ஒப்பாமலும் செய்கிறார்கள். இந்நிலையில் ஆன்மீக பெரியோர்களும் ஜோதிட வல்லுநர்களும் 'பித்ரி கண்டாந்தம்' எனும் ஒரு விடயத்தைப் பற்றி நினைவுறுத்துகிறார்கள்.

இந்த உலக இயக்கத்திற்கு நீர், நெருப்பு, காற்று, பூமி ஆகியவற்றின் ஒருங்கிணைவு இயல்பு என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நீர் மற்றும் நெருப்பு இவற்றின் சந்திப்பை ஜோதிடம் 'கண்டாந்தம்' என குறிப்பிடுகிறது. அதாவது ராசி மண்டலத்தை சந்திரன் சுற்றி வருகிறது. இப்படி சுற்றி வரும் காலகட்டத்தில் சில குறிப்பிட்ட நட்சத்திர பாதங்களில்.. குறிப்பிட்ட பாகைகளில்... சந்திரன் இருக்கும்போது நிகழும் (பிறப்பு) ஜனனம் அசுபமாக இருக்கும் என கருதுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் முதல் பாதத்தில் குறிப்பிட்ட பாகைகளிலும்... ஆயில்யம், கேட்டை, ரேவதி எனும் புதனின் நட்சத்திரங்களின் நான்காம் பாதத்தில் குறிப்பிட்ட பாகைகளிலும்... ஜனனம் நிகழ்ந்தால் அது அசுபமாக இருக்கும். அதாவது இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பாதங்களில்.. குறிப்பிட்ட பாகைகளில்.. பிறக்கும் குழந்தைகள் பிறக்கும் போதே இறக்கலாம் அல்லது ஆயுள் முழுவதும் பெற்றோர்களின் மனதில் ஆறா ரணத்தையும், ஆழமான வடுவையும் உண்டாக்கலாம்.

இந்த ஆறு நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தால்.. தாய்மை மற்றும் தந்தை எனும் அடையாளத்தை மிக குறுகிய காலம் மட்டுமே வழங்கக்கூடும். மேலும் சிலருக்கு இத்தகைய நட்சத்திரங்களில் குழந்தைகள் பிறந்தால்... அவர்களது சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். மிக மிக சிலருக்கு மட்டுமே வேறு வழியின்றி... குழந்தை பிறந்தால் அது தந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவர்கள் ஜோதிட வல்லுநர்களை அணுகி பரிகாரத்தை கேட்டால் இதற்கான பரிகாரத்தை எடுத்துரைப்பார்கள். ஆனால் பரிகாரங்கள் மேற்கொண்ட பின்னரும் பாதிப்பின் வீரியம் குறையுமே தவிர.. குறைந்த அளவிலான பாதிப்பு இருக்கும்.

மேலும் சில ஜோதிடர் வல்லுநர்கள் இத்தகைய கண்டாந்த தருணத்தில் குழந்தையின் பிறப்பு பகல் பொழுதில்  நிகழ்ந்தால் அது தந்தையையும், பிறப்பு இரவில் நிகழ்ந்தால் தாயையும் பாதிக்கும். இதனால் ஜோதிடர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் முகத்தை பிறந்த தருணத்திலிருந்து எட்டு ஆண்டுகள் வரை பார்க்கக் கூடாது என்ற ஒரு பரிகாரத்தையும் முன்மொழிகிறார்கள். வேறு சில ஜோதிட வல்லுநர்கள் 27 நாட்கள் வரை குழந்தையின் முகத்தை தந்தை பார்க்க கூடாது என்று கூறுவதுண்டு.

வேறு சில ஜோதிட வல்லுநர்கள் கண்டாந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அவர்களது அறிவிலும்.. அறிவின் வளர்ச்சியிலும் பாரிய குறைபாடு இருக்கும் என்றும், அவர்களது ஆயுளில் பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இது போன்ற கண்டாந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால்.. அந்த குழந்தையின் எந்த லக்னம் மற்றும் எந்த ராசி பாதிக்கப்பட்டிருக்கிறதோ... அந்த லக்னத்தின் தேவதை, அதிதேவதை, பிரதியதி தேவதை ஆகியவற்றை அறிந்து கொண்டு.. தொடர்ச்சியாக அவர்களை வழிபடுவதன் மூலம் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்