சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் : வர்த்தமானி கட்டளைகளை பாராளுமன்றில் விவாதிக்க தீர்மானம்

Published By: Digital Desk 5

18 Mar, 2023 | 10:32 AM
image

(செய்திப்பிரிவு)

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி கட்டளைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 21ஆம் திகதி  செய்வாய்க்கிழமை முதல் 24ஆம் திகதி  வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2208 -13ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புாிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தல் பற்றிய தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் வெளியிடப்பட்ட 2313-47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுக்கப்படவிருப்பதாக பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். மார்ச் 22ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்முல விடைக்களுக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் 2021 இன் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான 06 தீர்மானங்கள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2312-75 இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மார்ச் 23ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்முல விடைக்களுக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2308- 08 ஆம் இலக்க வர்த்மானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும்இ 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கஇ நலன்புாி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2310ஃ30 ஆம் இலக்க வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் அரசின் பல்வேறு சட்ட நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் தொடர்பான மூன்று பிரேணைகளை முன்வைப்பதற்கும் தனிநபர் சட்டமூலமாக இலங்கை பட்டய போக்குவரத்து நிறுவனம் மற்றும்  கல்வி அறக்கட்டளையை கூட்டிணைப்பதற்கான தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை இரண்டாவது வாசிப்புக்கு முன்வைக்கவும் இங்கு இணங்கப்பட்டது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03
news-image

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து...

2023-03-28 16:50:14
news-image

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்...

2023-03-28 16:42:40