(எம்.மனோசித்ரா)
விவசாயிகளுக்கு நெற்செய்கைக்குத் தேவையான 36,000 மெட்ரிக் தொன் டி.எஸ்.பி. உரத்தை ஏற்றிய எம்.வி. இன்ஸ் பசுபிக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதேபோன்ற மற்றொரு கப்பலும் நாட்டை வந்தடைய உள்ளது.
ஐக்கிய நாடுகள் உணவு , விவசாய அமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி திட்டம் (USAID) என்பவற்றின் ஒத்துழைப்புடன் இவ்வுரத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2023 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்ட அத்துடன், 2023 சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டாலும் மேற்கொள்ளாவிட்டாலும், நாட்டில் உள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் இந்த உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய ஒரு ஹெக்டயருக்கு 55 கிலோ கிராம் வீதம் இந்த உரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரக்கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், 'ஐக்கிய நாடுகள் உணவு, விவசாய அமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி திட்டம் என்பவற்றுக்கு இந்த உரத்தை வழங்கிமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நன்கொடையானது 1 மில்லியனுக்கும் அதிகமான நெல் விவசாயிகளுக்கு அரிசி உற்பத்திக்கு உதவும் என்பதோடு இலங்கையை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM