பென்ஸை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து வரலாறு படைத்தார்

Published By: Digital Desk 5

18 Mar, 2023 | 08:55 AM
image

(நெவில் அன்தனி)

விண்ணுலகில் நிச்சியிக்கப்பட்ட பென்ஸ் - வெஸ்லி அணிகளுக்கு இடையிலான 3ஆவது வருடாந்த கார்ட்மன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷாருஜன் சண்முகநாதன், விதுனேத் வில்சன், ஷெரன் கன்னங்கர ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் புனித  பெனடிக்ற்   அணியை பலமான நிலையில் இட்டுள்ளன.

பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) ஆரம்பமான அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ற் அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 65 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.

விதுனேத் வில்சன் 73 ஓட்டங்களையும் ஷெரன் கன்னங்கர 68 ஓட்டங்களையும் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கன்னங்கர ஆட்டமிழந்த பின்னர் ஷாருஜன் சண்முகநாதனுடன்  2ஆவது விக்கெட்டில்   மேலும் 53 ஓட்டங்களை பகிர்ந்த வில்சன், மொத்த எண்ணிக்கை 178 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத போதிலும் 'லிட்ல் சங்கா' என அழைக்கப்படும் ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி எதிரணி பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து ஆட்டம் இழக்காமல் 98 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனிடையே நடப்பு பாடசாலை கிரிக்கெட் பருவகாலத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து வரலாறு படைத்தார்.

பென்ஸ் - வெஸ்லி கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளுக்கும் தலா 65 ஓவர்களே வழங்கப்படும் என்ற தீர்மானம் காரணமாக ஷாருஜனுக்கு சதம் குவிக்கும் வாய்ப்பு அற்றுப் போனது.

பந்துவீச்சில் ஷக்கேஷ் மினோன் 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்து சிகேரா 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் வெஸ்லி அணி முதலாவது நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 32 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியதும் வெஸ்லி அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வரும்.

துடுப்பாட் டத்தில் உவின் பெரேரா ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் அனுக்க பஹன்சர ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் சனித்து அமரதுங்க 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அணித் தலைவர் சமத் சத்துரிய 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தினத் செனில 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை (18) காலை தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11
news-image

சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான...

2023-03-26 20:42:41
news-image

அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி...

2023-03-26 10:52:19
news-image

நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி:...

2023-03-25 15:08:38
news-image

ஒருநாள் போட்டியிலும் சென் தோமஸ் அணியை...

2023-03-24 20:36:06
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே...

2023-03-24 17:06:36