சென் தோமஸ் அணியை சகல துறைகளிலும் விஞ்சிய றோயல் 341 ஓட்டங்களால் முன்னிலை

17 Mar, 2023 | 09:53 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் 144ஆவது நீலவர்ணங்களின் சமரில் சலதுறைகளிலும் சென் தோமஸ் அணியைத் திணறச்செய்த றோயல் அணி 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதம் இருக்க 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 341 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

பெரும்பாலும் றோயல் அணி 2ஆவது இன்னிங்ஸை சனிக்கிழமை (18) காலை டிக்ளயார் செய்து சென தோமஸுக்கு 342 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணியிக்கும் என கருதப்படுகிறது.

மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ள சென் தோமஸ் அணி, அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் பொறுமையுடன், அதேவேளை மன உறுதியுடன் துடுப்பெடுத்தாடினால் ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், போட்டியின் தற்போதைய நிலையின் அடிப்படையில் றோயல் அணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்தப் போட்டியின் முதல் நாளான வியாழனன்று துடுப்பாட்டத்திலும் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பந்துவீச்சிலும் அசத்திய றோயல் பெரும்பாலும் கடைசி நாளான சனிக்கிழமையன்று வெற்றியைக் குறிவைத்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வருட பாடசாலை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் சென் தோமஸ் அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது கோட்டை விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 173 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தபோதிலும் சென் தோமஸ் அணிக்கு ஃபலோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட றோயல் அணி தீர்மானித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆரம்ப வீரர்களான சினேத் ஜயவர்தன (4), ஒவின அம்பன்பொல (5) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது றோயல் அணியினரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

எனினும், முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்து அசத்திய அணித் தலைவர் தாசிஸ் மஞ்சநாயக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட தான் எடுத்த தீர்மானம் சரி என்பதை நிரூபித்தார். முதல் இன்னிங்ஸில் 137 ஓட்டங்களைக் குவித்த தாசிஸ், 2ஆவது இன்னிங்ஸில் 57 ஓட்டங்களைப் பெற்றார். 28 ஓட்டங்களைப் பெற்ற உவிந்து வீரசேகரவுடன் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களை தாசிஸ் பகிர்ந்தார்.

றோயல் அணி  அதன் 2ஆவது இன்னிங்ஸில் இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் 128 ஓட்டங்களைக் குவித்த ரமிரு பெரேரா 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சென் தோமஸ் பந்துவீச்சில் ஆகாஷ் பெர்னாண்டோ 59 ஓட்டங்களுக்கு வீழ்ந்த 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

போட்டியின் முதலாம் நாளன்று 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்ற றோயல் அணி அந்த எண்ணிக்கையுடன் டிக்ளயார் செய்வதாக வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் தோமஸ் அணி, எதிரணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு 153 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆரம்ப வீரர் சேனாதி புலேன்குலம திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசை வீரர்களான மஹித் பெரேரா 30 ஓட்டங்களையும் நாதன் கல்தேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

றோயல் பந்துவீச்சில் புலான் வீரதுங்க 26 ஓட்டங்கக்கு 3 விக்கெட்களையும் சிரேன் ஜயவர்தன 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆர். மல்லவஆராச்சி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எஸ். ராமநாயக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11