(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கும் இருபது 20 குழாத்தில் குசல் ஜனித் பெரேராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள 50 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணியின் மத்திய வரிசை துடுபாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் ஏஞ்சலோ மெத்யூஸை இலங்கை குழாத்தில் அணி தெரிவாளர்கள் இணைத்துக்கொண்டுள்ளனர்.
218 போட்டிகளில் பங்குபற்றி 6,000 ஓட்டங்களை அண்மித்துக்கொண்டிருக்கும் ஏஞ்சலோ மெத்யூஸ், கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 வருடங்களுக்கு முனனர் விளையாடியிருந்தார்.
அவருக்கு போதிய உடற்தகுதி இல்லை எனவும் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்து மெத்யூஸ் உட்பட இன்னும் சில வீரர்களை ப்ரமோதய விக்ரமசிங்க தலைமையிலான அப்போதைய தெரிவுக்குழு நீக்கியிருந்தது.
எனினும் இளம் வீரர்களுக்கு மத்திய வரிசையில் தாக்குப் பிடிக்கக்கூடிய திராணி இல்லாததாலும் போதிய அனுபவம் இல்லாததாலும்மீண்டும் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரமவும் 4சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 குழாம்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 9 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் மாத்திரம் விளையாடியுள்ள சதீர சமரவிக்ரம அண்மைக் காலமாக உள்ளூர் போட்டிகளில் அபரிமிதமாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். இதனைக் கருத்தில் கொண்டே அவருக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் கடைசியாக 2019இல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் விளையாடியிருந்தார்.
இதேவேளை, குசல் ஜனித் பேரேராவுக்கு இருபது 20 கிரிக்கெட் குழாத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அறிமுக வீரராக லசித் குரூஸ்புள்ளேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குசல் பெரேரா கடைசியாக அபு தாபியில் 2021இல் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார்.
லசித் குரூஸ்புள்ளே உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்ததை அடுத்தே அவர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக சர்வதேச ஒருநாள் மற்றம் சர்வதேச இருபது 20 ஆகிய இருவகை கிரிக்கெட் தொடர்களில் தலா 3 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக்க செயற்படவுள்ளார்.
இந்தத் தொடர்களை முன்னிட்டு தலா 18 வீரர்களைக் கொண்ட இரண்டு குழாம்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன் ஏஞ்சலோ மெத்யூஸ், சஹான் ஆராச்சிகே ஆகிய இருவரும் ஒருநாள் குழாத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றனர்.
குசல் ஜனித் பெரேரா, லசித் குரூஸ்புள்ளே ஆகிய இருவரும் இருபது 20 குழாத்தில் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் இரண்டு குழாம்களிலும் இடம்பெறுவதுடன் ஒருநாள் அணிக்கு உதிவித் தலைவராக குசல் மெண்டிஸும் இருபது 20 அணிக்கு உதிவித் தலைவராக வனிந்து ஹசரங்க டி சில்வாவும் பெயரிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டு குழாம்களிலும் இடம்பெறுகின்றனர்.
துஷ்மன்த சமீர உபாதையிலிருந்து முழுமையாக குணம் பெறாததால் அவர் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான இலங்கை குழாம்
தசுன் ஷானக்க (தலைவர்), குசல் மெண்டிஸ் (உதவி அணித் தலைவர் - ஒருநாள் அணி), வணிந்து ஹசரங்க டி சில்வா (உதவி அணித் தலைவர் - இ20 அணி), ஏஞ்லோ மெத்யூஸ் (ஒரு நாள் அணியில் மாத்திரம்), குசல் ஜனித் பெரேரா (இருபது 20 அணியில் மாத்திரம்), பெத்தும் நிஸ்ஸன்க, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சஹான் ஆராச்சிகே (ஒருநாள் அணியில் மாத்திரம்), துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, லஹிரு குமார, ப்ரமோத் மதுஷான், டில்ஷான் மதுஷன்க, சாமிக்க கருணாரட்ன, மதீஷ பத்திரண, லசித் குரூஸ்புள்ளே (இருபது 20 அணியில் மாத்திரம்).
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM