ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்தின் மக்கள் நலத்திட்டங்களுக்கு வரவேற்பு

Published By: Nanthini

17 Mar, 2023 | 04:47 PM
image

(ஏ.என்.ஐ)

மக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க  பல்வேறு பொது நலத் திட்டங்களை ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் தொடங்கியுள்ளது. 

இந்த முயற்சியானது சாதகமான முடிவுகளைக் காட்டி வருவதுடன், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டங்கள் உள்ளூர் மட்டத்தில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக வரவேற்கப்படுகின்றன. 

மேலும், இத்திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பான மக்கள் சந்திப்புகள் கோகர்நாக் தொகுதியின் பின்தங்கிய மற்றும் மலைப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, குஜ்ஜார் சமூகத்தினர், தங்கள் வருகையை உறுதிசெய்து, தமது கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதற்கு திட்ட நிர்வாக அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.  

மேலும், உள்ளூர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வைலூ, சிங்கபுரா சுரங்கப்பாதை அமைப்பதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டால், அச்சந்தர்ப்பங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; இது ஏழைகளுக்கான வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் அப்பகுதியில் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததுடன் சீரற்ற சாலைகளும் காணப்படுகின்றன. 

எனவே, தற்போதுள்ள சாலைகளை சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்து, மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதிகபட்சம், ஆறு மாதங்களுக்கு இப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. குளிர்காலத்தில், குறிப்பாக பனி நாட்களில் மின்சாரம் இருக்காது. ஆனாலும், மக்களிடம் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிவித்தனர். 

பொதுமக்களின் இத்தகைய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18
news-image

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர்...

2023-03-28 12:33:42
news-image

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி,...

2023-03-28 11:25:52
news-image

லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது...

2023-03-28 09:47:26
news-image

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்...

2023-03-28 06:57:51
news-image

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும்...

2023-03-27 16:49:36
news-image

ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு:...

2023-03-27 16:13:25
news-image

ஆப்கானில் மாணவிகளின் கல்வி- ஒவ்வொரு நாளும்...

2023-03-27 15:36:15