'ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல்' எனும் தொனிப்பொருளில் ஜி-20 கருத்தரங்கு

Published By: Nanthini

17 Mar, 2023 | 04:50 PM
image

(ஏ.என்.ஐ)

ந்திய கல்வி அமைச்சின் கீழ் ஜி-20 கல்வி பணிக்குழுவின் பிரதிநிதிகளால் ஒருங்கமைப்பில் மார்ச் 15, 16, 17ஆம் திகதிகளில் மூன்றுநாள் கருத்தரங்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் கல்சா கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, 'ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சமத்துவ வளர்ச்சிக்காக நாடுகளுக்கு இடையே பாலங்கள் கட்டுவதில் கவனம் செலுத்தி, அது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விவாதித்துள்ளனர்.

அத்தோடு இக்கருத்தரங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை வடிவமைப்பதற்காக அரசு-கல்வித்துறை-தொழில்துறை இணைப்புகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், இந்த கருத்தரங்கில் உயர்கல்வி செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ரோபர், பேராசிரியர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினர். 

பேராசிரியர் அனில் குப்தா, பேராசிரியர் ராஜீவ் அஹுஜா தலைமையில், 'வளர்ந்து வரும், சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் துறையில் ஆராய்ச்சி - 4.0' என்ற தலைப்பில் முதல் கருத்தரங்கு இடம்பெற்றது. 

மேலும், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகள், கல்வி முறைகள் மற்றும் பொதுவாக சமூகத்தில் அவற்றின் தாக்கத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பங்குதாரர்களின் பங்கு பற்றிய நுண்ணறிவை இதன்போது பகிர்ந்துகொண்டனர்.

அத்தோடு சீனா, ஓமன், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு உறுப்பினர்களுடன் பேராசிரியர் ஷாலினி பாரத் தலைமையில் 'நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஆராய்ச்சி' என்ற இரண்டாவது கருத்தரங்கு இடம்பெற்றது.

இதில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18
news-image

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர்...

2023-03-28 12:33:42
news-image

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி,...

2023-03-28 11:25:52
news-image

லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது...

2023-03-28 09:47:26
news-image

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்...

2023-03-28 06:57:51
news-image

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும்...

2023-03-27 16:49:36
news-image

ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு:...

2023-03-27 16:13:25
news-image

ஆப்கானில் மாணவிகளின் கல்வி- ஒவ்வொரு நாளும்...

2023-03-27 15:36:15