அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு 

Published By: Sethu

17 Mar, 2023 | 04:07 PM
image

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிம் பெய்ன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இனறு அறிவித்தள்ளார்.

அவுஸ்திரேலிய மாநில அணிகளுக்கு இடையிலான ஷீபில்ட் ஷீல்ட் கிண்ணப் போட்டிகளில், குயின்ஸ்லாந்து மாநில அணிக்கு எதிராக தாஸ்மேனியா மாநில அணி சார்பில் விளையாடிய பின்னர் 38 வயதான  பெய்ன் ஓய்வு பெற்றார்.

ஹோர்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி இன்று முடிவடைந்தது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களையும் பெய்ன் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான  பெய்ன், 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 

35 டெஸ்ட் போட்டிகளில்  9 அரைச்சதங்கள் உட்பட 1,534 ஓட்டங்களை அவர் பெற்றார்.  150 பிடிகளைக் கைப்பற்றியதுடன் 7 ஸ்டம்பிங்குகளையும் அவர் செய்துள்ளார். 35 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 12 சர்வதேச இருபது20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

23 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு ரிம் பெய்ன் தலைமை தாங்கியுள்ளார். இவற்றில் 11 வெற்றிகளை அவுஸ்திரேலியா பெற்றது. 8 போட்டிகளில் தோல்வியுற்றது. 4 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11