கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? இந்திய மத்திய அரசு விளக்கம்

Published By: Rajeeban

17 Mar, 2023 | 03:45 PM
image

கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படும் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பின்னர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:02:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35