FIFA தேர்தலில் இலங்கை, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு வாக்களிக்க தடை

Published By: Digital Desk 5

17 Mar, 2023 | 03:40 PM
image

(நெவில் அன்தனி)

ருவண்டாவின் கிகாலி நகரில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற FIFAவின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த பொதுச் சபைக் கூட்டத்தின்போது FIFA பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் ஜியானி இன்ஃபன்டீனோ மீண்டும் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73ஆவது FIFA பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச கால்பந்தாட்ட நிருவாகக் குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். 

உலகம் முழுவதும் உள்ள 211 கால்பந்தாட்ட சங்கங்கள் அல்லது சம்மேளனங்கள், உயர்மட்ட நிருவாகிகள் உட்பட அழைப்பு பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது வழமை.

FIFAவில் அங்கம் வகிக்கும் 211 கால்பந்தாட்ட சங்கங்கள் அல்லது சம்மேளனங்களில் 199 உறுப்பினர் சங்கங்கள் ஸிம்பாப்வேயை இடைநிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன, அதேவேளை, FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கையை தடுக்கும் பிரேரணைக்கு 197 உறுப்பின்ர் சங்கங்கள் வாக்களித்தன.

FIFAவின் சம்பிரதாயங்கள் மற்றும் விதிகளை மீறும் வகையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) நிருவாக உத்தியோகத்தர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து FFSLஇல் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை கடந்த ஜனவரி மாதம் FIFA தடைசெய்தது.

FFSL உட்பட தேசிய விளையாட்டுத்துறை அமைப்புகளின் சுயாதீனம் மற்றும் சுதத்திரத்தைப் பாதிக்கச் செய்யும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சு புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளை அறிமுகப்படுத்திய பின்னர் இந்தத் தடை விதிக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஸிம்பாப்வே கால்பந்தாட்ட சங்கத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து 2022இல் ஸிம்பாப்வே கால்பந்தாட்ட சங்கத்தை FIFA தடை செய்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஸிம்பாப்வே காலபந்தாட்ட சங்கம், ஊழல்மோசடிகள், திறமையின்மை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராகவே ஸிம்பாப்வெ அதிகாரிகள் செயற்படுவதாகத் தெரிவித்ததாக அறிக்கைகள் குறிப்பிட்டன.

கிகாலியில் FIFA காங்கிரஸ் FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நடத்தும் நாடு என்ற வகையில் ருவண்டா தேசத்தின் ஜனாதிபதி போல் ககாமே கூட்டத்தில் கலந்து கொண்டார்.

FIFA பொதுச்சபை கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உறுப்பினர் சங்கத்தை இடைநிறுத்துதல் அல்லது நீக்குதல், FIFAவின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தல், 2022 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான FIFA சட்டப்பூர்வ நிதிநிலை அறிக்கைகளின் ஒப்புதலுக்கான வாக்களிப்பு என்பன இடம்பெறும்.  அத்துடன் FIFAவின் 2023-2026 சுழற்சிக்கான பட்ஜட், 2024க்குகான விரிவான பஜட் ஆகியவற்றின் ஒப்புதலுக்கான வாக்களிப்பும் இடம்பெறும்.

இம்முறை 3ஆவது தவணைக்காலத்திற்கு போட்டியின்றி தலைவராக   இன்ஃபன்டீனோ தெரிவாகியுள்ளார். ஒரு வேட்பாளருக்கு 3 தவணைக் காலங்கள் தலைவராக FIFAவில் பதவி வகிக்க முடியும். இதற்கு அமைய தனது கடைசித் தவணையில் இன்ஃபன்டீனோ தலைவராகப் பதவி வகிக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11