தேர்தல் குறித்து தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன - ஜனக வகும்பர

Published By: Digital Desk 5

17 Mar, 2023 | 03:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முதலில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தலையிடவில்லை.

தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால் அவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. தன்னிச்சையான முறையில் எடுத்த தீர்மானங்கள் இன்று துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன.

தேர்தல் நடவடிக்கைகளுக்கும்,வேட்பாளர்களுக்கும் தேவையான எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது,தேர்தல் திகதி அறிவிப்பை விடுக்க முன்னர் ஆணைக்குழு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருக்காது.

தேர்தல் தொடர்பில் முதலில் சகல தரப்பினரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், ஆகவே தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவித்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும்.

காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (19) நிறைவு பெறும்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சகல மாகாண ஆளுநர்களுக்கும் விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களினால் புனரமைப்பு பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும், நிர்வாக கட்டமைப்பில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19