வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் நிரந்தர கட்டிடம் - டக்ளஸ்

Published By: Digital Desk 5

17 Mar, 2023 | 04:15 PM
image

வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை இல்லாது காணப்பட்ட வேலணை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டடத்தில் வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்கள் தாம்  வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் பால் சேகரிப்பு மற்றும்  உற்பத்திகளை மொத்தமாக கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்தனர்.

வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாழடைந்த குறித்த கட்டடத்தை ஆஸ்திரேலிய தன்னார்வ நிறுவனம் புனரமைத்து உள்ளூர் விவசாய பொருட்களை சந்தைப் படுத்துவதற்காக என வழங்கியிருந்தது.

குறித்த கட்டடத்தில் வேலணை பிரதேச பால் உற்பத்தியாளர்கள் தமது அறுவடைகளை இதுவரைகாலமும் மொத்தமாக கொள்வனவு செய்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துவந்தனர்.

இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தினர் குறித்த கட்டடத்தை பிறிதொரு அமைப்பினருக்கு வழங்கியது.

இதனால் இதுவரைகாலமும் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்துவந்த உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.

இதையடுத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு  கொண்டுவரப்பட்டது.

வெள்ளிக்கிழமை (17) பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது பிரச்சினைகள் மற்றும் நிரந்தர் கட்டடத்தின் தேவைப்பாடு தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தனர்.

பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையில் கரிசனை கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசர் அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே சமரசமான இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வையும்  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56