தெலுங்கானா  வணிகக் கட்டடத்தில் தீ: 6 பேர் பலி

Published By: Sethu

17 Mar, 2023 | 02:04 PM
image

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் வணிகவளாக கட்டடமொன்றில் ஏற்பட்ட தீயினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

செந்திராபாத் நகரில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

8 மாடிகளைக் கொண் இக்கட்டடத்தின் 5 ஆவது தளத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், 6 ஆவது, 7 ஆவது மாடிகளுக்கும் தீ பரவியது. அதனால், கட்டடத்தில் இருந்தவர்கள் கீழே இறங்கி ஓடினர். சுpலர் ஜன்னல் வழியாக குதித்தனர்.

எனினும், சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர். தீயணைப்புப் படையினர் 18 பேரை மீட்பு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது......

2023-03-29 16:33:34
news-image

புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது...

2023-03-29 15:55:27
news-image

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக...

2023-03-29 15:44:26
news-image

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில்...

2023-03-29 13:15:22
news-image

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம்...

2023-03-29 12:20:57
news-image

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய...

2023-03-29 12:02:57
news-image

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஹம்ஸா யூசுப் தெரிவானார்

2023-03-29 09:28:30
news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18