(நெவில் அன்தனி)
வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் சீரற்ற கால நிலை காரணமாக தாமதித்து ஆரம்பமான இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் டெவன் கொன்வே குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைந்துள்ளது.
அதிகாலை பெய்த மழை காரணமாக சுமார் 3 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான முதலாம் நாள் போட்டியில் 48 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களுடனும் ஹென்றி நிக்கல்ஸ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்இழக்காமல் உள்ளனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நியூஸிலாந்து நேரப்படி பிற்பகல் 2.15 மணி அளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
டொம் லெதம் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கசுன் ராஜித்தவின் பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரியவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 118 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து டெவன் கோன்வே 78 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கசுன் ராஜித்த 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க எண்ணியுள்ளதாகவும் நிரோஷன் திக்வெல்லவுக்குப் பதிலாக அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க விக்கெட் காப்பாளராக விளையாடுவார் எனவும் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன வியாழக்கிழமை (16) கூறியிருந்தார்.
எனினும் முதலாவது டெஸ்டில் போன்றே 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல்பந்துவீச்சாளருடனேயே இரண்டாவது டெஸ்டையும் இலங்கை எதிர்கொள்கிறது.
எவ்வாறாயினும் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி வந்துள்ள நிரோஷன் திக்வெல்ல நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் விக்கெட் காப்பாளராக விளையாடுகிறார்.
உள்ளூர் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் மதுஷ்க டெஸ்ட் போட்டியில் 7ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM