இந்தியா - பூட்டான் செயற்கைக்கோளுக்கான தரை-பூமி நிலையம் திறப்பு

Published By: Nanthini

17 Mar, 2023 | 04:01 PM
image

(ஏ.என்.ஐ)

ந்தியா - பூட்டான் செயற்கைக்கோளுக்கான தரை-பூமி நிலையம் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், பூட்டானின் வெளியுறவு அமைச்சர் லியோன் போ டான்டி டோர்ஜி, பூட்டானின் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் லியோன்போ கர்மா டோனன் வாங்டி மற்றும் பூட்டானுக்கான இந்திய தூதர் சுதாகர் தலேலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பூட்டான் மன்னர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்தியா - பூட்டான் கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு சான்றாக இந்த தரை பூமி திறப்பு நிகழ்வு அமைந்துள்ளதாக பூட்டானில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தரை-பூமி நிலையம் பூட்டான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், பூட்டானின் உள்நாட்டு நீரின் தரம், காடு மற்றும் உயிரி உறைவு, பனி மற்றும் பனிப்பாறை உறை,  பூட்டானின் புவியியல் மற்றும் நீரியல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு இந்த தரவு மையம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட இந்தியா - பூட்டான் செயற்கைக்கோளின் மூலமான தரவு, உள்நாட்டு நீரின் தரம், காடு மற்றும் உயிரி உறைவு, பனி மற்றும் பனிப்பாறை உறைவு, பூட்டானின் புவியியல் மற்றும் நீரியல் மற்றும் பூட்டான் மக்களுக்கும் நன்மை விளைவிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

மேலும், இந்த தரை-பூமி நிலையம், இந்தியா - பூட்டான் கூட்டாண்மையை 21ஆம் நூற்றாண்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய மற்றும் வளர்ந்துவரும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

அத்துடன் இந்தியா - பூட்டான் விண்வெளி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இஸ்ரோ மற்றும் பூட்டானின் பிரதிநிதிகள், இந்தியா - பூட்டான் கூட்டு செயற்கைக்கோள் ஏவப்படுவது உட்பட அதன் மூலம் பெறுகிற அனுபவம் மற்றும் மைல்கற்களை மதிப்பாய்வு செய்தனர். 

இந்நிலையில் பூட்டானில் உள்ள இந்திய தூதரகம் ஒரு ட்விட்டர் பதிவினூடாக 'திறன் மேம்பாடு மூலம் விண்வெளி தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் விண்வெளி தரவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு -...

2024-05-29 09:48:41
news-image

பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே அயர்லாந்து...

2024-05-28 20:10:07
news-image

11 ஆவது உலக நீர் மன்றத்தை...

2024-05-28 21:49:41
news-image

ரபாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது- அவுஸ்திரேலியா

2024-05-28 11:43:29
news-image

இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலகின்...

2024-05-28 10:37:39
news-image

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

2024-05-28 09:34:31
news-image

துருக்கியில் வாகனங்கள் மீது பஸ் மோதி...

2024-05-28 09:23:04
news-image

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி,...

2024-05-28 02:48:14
news-image

பப்புவா நியூ கினிய மண்சரிவு ;...

2024-05-27 17:16:01
news-image

ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தல்...

2024-05-27 17:02:59
news-image

ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில்...

2024-05-27 16:27:10
news-image

பப்புவாநியுகினி மண்சரிவு - 2000க்கும் அதிகமானவர்கள்...

2024-05-27 14:21:11