உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்பும் முதல் நேட்டோ நாடாகுகிறது போலந்து

Published By: Sethu

17 Mar, 2023 | 01:05 PM
image

சோவியத் காலத்தைச் சேர்ந்த 4 மிக் ரக போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவித்துள்ளது. 

எதிர்வரும் சில நாட்களில் இவ்விமானங்கள் அனுப்பப்படும் என போலந்து ஜனாதிபதி அன்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்பும் முதலாவது நேட்டோ அங்கத்துவ நாடு போலந்து ஆகும்.

இது உக்ரேனின் வான்பலத்தை அதிகரிக்கும் என்ற போதிலும், யுத்தத்தில் இது தீர்க்கமான பங்காற்றும் என எதிர்பார்க்கப்படவில்iலை.  

மேலும் பல நாடுகள் போலந்தை பின்பற்றும் என தான் நம்புவதாக உக்ரேனின் பிரதி சபாநாயகர் ஒலீனா கொன்ட்ராட்யுக் கூறியுள்ளார்.

ஏனைய நேட்டோ நாடுகள் சோவியத் காலத்து போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இத்தகைய விமானங்களை இயக்குவதற்கே உக்ரேனிய விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர். 

ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான வேளையில், சுமார் 120 போர் விமானங்கள் உக்ரேனிடம் இருந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பழைய மிக் 29 மற்றும் எஸ்யயூ-27 ரக போர் விமானங்களாகும்.

சுமார் ஒரு டசின் மிக் 29 போர் விமானங்கள் போலந்தில் இன்னும் பாவனையில் உள்ளது என போலந்து ஜனாதிபதி டுடா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எவ்16 விமானங்கள் போன்ற நவீன போர் விமானங்களை வழங்குமாறு மேற்குலக நாடுகளை உக்ரேன் முன்னர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது......

2023-03-29 16:33:34
news-image

புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது...

2023-03-29 15:55:27
news-image

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக...

2023-03-29 15:44:26
news-image

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில்...

2023-03-29 13:15:22
news-image

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம்...

2023-03-29 12:20:57
news-image

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய...

2023-03-29 12:02:57
news-image

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஹம்ஸா யூசுப் தெரிவானார்

2023-03-29 09:28:30
news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18