(நெவில் அன்தனி)
டெல்ஹி கெப்பிட்டல் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாயகி ஏஷ்லி கார்ட்னர் சகலதுறைகளிலும் பிரகாசித்து குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு 11 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
எனினும் அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலிருக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 6 புள்ளிகளையே பெற முடியும்.
நட்சத்திர வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரொட்றிக்ஸ், ஜெஸ் ஜோனாசன் ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டமை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம். இந்த மூவரும் அவசரப்பட்டு தவறான அடிகளைப் பிரயோகித்து விக்கெட்களை இழந்தனர்.
மெக் லெனிங், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்து 38 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லெனிங் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மோத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் சேர்ந்தபோது அலிஸ் கெப்சி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். (50 - 3 விக்.).
அதன் பின்னர் 48 ஓட்டங்கள் இடைவெளியில் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (100 - 8 விக்.)
ஆட்டமிழந்த ஐவரில் நால்வர் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேற மாரிஸ்ஆன் கெப் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 36 ஓட்டங்களைப் பெற்றார்.
இந் நிலையில் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அருந்ததி ரெட்டி, ஷிக்கா பாண்டி ஆகிய இருவரும் வெற்றி இலக்கை நோக்கி நிதானத்துடன் நகர்ந்துகொண்டிருந்தனர்.
இருவரும் 9ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அருந்ததி ரெட்டி 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க டெல்ஹி கெப்பிட்டல்ஸின் எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டது.
பந்துவீச்சில் கிம் கார்த் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷ்லி கார்ட்னர் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
லோரா வுல்வார்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களினால் குஜராத் அணி பலமான நிலையை அடைந்தது.
சொஃபியா டன்க்லி (4) ஆட்டமிழந்தபின்னர் (4 - 1 விக்.) லோரா வுல்வார்ட், ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டியோல் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து லோரா வுல்வார்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
லோரா வுல்வார்ட் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் ஏஷ்லி காரட்னர் 9 பவுண்டறிகள் அடங்களாக ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.
பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM