ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவர்களோ ஒரே தினத்தில் பிறப்பது, ஒரே தினத்தில் இறந்து பல வருடங்கள் கழித்து அதே தினத்தில் இறப்பது போன்ற இயற்கை ஆச்சரியங்கள் அடிக்கடி நடப்பவைதாம்! ஆனால், இது சற்று வித்தியாசமானது.

ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது மகனுமே இந்தச் சாதனையை(!) படைத்துள்ளனர். 

1980ஆம் ஆண்டு, ஐஸ்லாந்தின் முதல் குழந்தையாக - அதாவது, 01.01.1980 அன்று நள்ளிரவில் பிறந்தவர் கத்ரின். அவர், தனது மூன்றாவது குழந்தையை கடந்த புது வருடத்தன்று நள்ளிரவு 12.03 மணியளவில் ஈன்றெடுத்தார்.

இதன்படி, தாயும் மகனும் முறையே 1980 மற்றும் 2017ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தின் முதல் குழந்தையாகப் பிறந்து முத்திரை பதித்துள்ளனர்.

தனது மகனும் தன்னைப் போலவே வருடத்தின் முதற் குழந்தையாகப் பிறப்பான் என்று தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கத்ரீன் தெரிவித்துள்ளார்.