'சப்தம்' படக் குழுவுடன் இணைந்த சிம்ரன்

Published By: Ponmalar

17 Mar, 2023 | 04:01 PM
image

நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடித்து வரும் 'சப்தம்' எனும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சப்தம்'. இதில் நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகைகள் லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் மூத்த நடிகை சிம்ரன் இணைந்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

ஹாரர் திரில்லர் தயாராகும் இந்த திரைப்படத்தை 7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் அறிவழகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதனிடையே நடிகை சிம்ரன் கடந்த ஆண்டில் வெளியான சீயான் விக்ரமின் 'மகான்', மாதவனின் 'ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்', ஆர்யாவின் 'கேப்டன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பதும், விரைவில் வெளியாகவிருக்கும் பிரசாந்தின் 'அந்தகன்', சீயான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19