புத்தூரில் பொது நூலகம் அமைக்க மேலும் 30 மில்லியன் நிதி சபையினால் விடுவிப்பு - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் 

Published By: Nanthini

17 Mar, 2023 | 04:00 PM
image

லிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்துக்கான நவீன பொது நூலகத்தினையும் கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில் 30 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு, வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். 

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (16) தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றபோதே இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

எமது சபையின் இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 6 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது போதாத நிலையில், கடந்த மாதம் முடிவுறுத்தப்பட்ட இறுதிக் கணக்குகளின் பிரகாரம், 30 மில்லியன்கள் எமக்கு கிடைத்துள்ளன. 

அரச நிறுவனங்கள் பெப்ரவரி மாத இறுதியிலேயே இந்நிதியினை இறுதியாக அடையாளப்படுத்த முடியும். 

இந்த நிதியை பயன்படுத்தி, ஏற்கனவே சபையில் பெறப்பட்ட தீர்மானத்துக்கமைய, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

அதன் முதற்கட்டமாக நிலம் ஒதுக்கப்பட்டு, அமைப்பு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்வமைப்பு வரைபடம் சீராக்கங்களுக்கு உரியதென பட்டய பொறியியலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் கட்டடங்கள் திணைக்களத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அல்லது உரிய பெறுகை சட்ட நடைமுறைகளுக்கமைய கேள்விக்கோரல் நடத்தப்பட்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும், எம்மால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியானது வலிகாமம் பிரதேச மக்களின் பணம் என்பதையிட்டு பெருமையடைகிறோம். 

நீண்ட காலமாக புத்தூர் உப அலுவலகத்துக்குட்பட்டு சிறந்த நூலகத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலும், இதற்காக நிதி ஒதுக்குவதில் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

எனினும், தற்போது சபையின் இறுதிக்காலத்திலேனும் இத்திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முடிந்துள்ளது என்பதில் திருப்திகொள்கிறோம்.

இந்த கட்டுமான வேலைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான சபைத் தீர்மானங்கள் உரிய வகையில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உத்தியோகத்தர்களால் நூலகத்தை அமைத்து மக்கள்மயப்படுத்த முடியும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடிக்கு புதிய லிபரல்வாத பொருளாதார...

2024-09-12 23:33:54
news-image

யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை...

2024-09-12 23:18:28
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,610 ...

2024-09-12 21:51:20
news-image

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ்,...

2024-09-12 21:03:28
news-image

தனமல்விலயில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு ;...

2024-09-12 20:00:12
news-image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட...

2024-09-12 19:56:10
news-image

முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ;...

2024-09-12 19:52:04
news-image

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே...

2024-09-12 19:32:03
news-image

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு? -...

2024-09-12 19:06:41
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும்...

2024-09-12 18:27:44
news-image

அச்சுறுத்தல்களால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுக்க...

2024-09-12 18:23:24
news-image

தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...

2024-09-12 17:36:34