சிறந்த விமானப்படை வீர, வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் வைபவம்

Published By: Nanthini

17 Mar, 2023 | 11:13 AM
image

விமானப்படையின் சிறப்பு விருது வழங்கல் நிகழ்வானது கடந்த மார்ச் 15ஆம் திகதி புதன்கிழமை கட்டுநாயக்க விமானப்படை ஈகிள் லகூன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின் முன்னேற்றத்துக்காக ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமது தொழிலுக்கு அப்பாற்பட்ட திறன்களை வெளிப்படுத்தி வரும்  சிறந்த விமானப்படை வீர, வீராங்கனைகளை  அங்கீகரிப்பதற்காக வருடந்தோறும் விருது வழங்கல் நிகழ்வு நடத்தப்படும்.

விமானப்படையின் ஒவ்வொரு தொழில் பிரிவில் சிறந்த விமானப்படை வீரர் தெரிவாகி, அப்பிரிவின் பணிப்பக குழுவின் மேற்பார்வையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறையின்படி ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.  

பின்னர், பரிந்துரைகளின்படி, அதிக புள்ளிகளை பெறும் விமானப்படை வீரர் மற்றும் விமானப்படை வீராங்கனை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை வீரராக சீனக்குடா விமானப்படை கல்வி பீடத்தின் இல.01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கடமையாற்றும் வாரென்ட் அதிகாரி ப்ரியங்கர தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த விமானப்படை வீராங்கனையாக கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் அதிகாரிகள் உணவகத்தின் உதவியாளராக கடமையாற்றும் கோப்ரல் லக்ஷிகா தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும், குழுக்களுக்கான பிரிவில், சிறந்த சூழ்நிலை கட்டுப்பாட்டு அணியாக 'தியத்தலாவ' விமானப்படைத்தளமும், சிறந்த சுற்றாடல் முகாமைத்துவ திட்ட குழுவாக 'பாலாவி' விமானப்படைத்தளமும், சிறந்த ஆய்வுக் குழுவாக 'மிஹிரிகம' விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவும் விருதுகளை பெற்றதுடன், சிறந்த விமானப்படை வீர, வீராங்கனைகளுக்கான பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி, விமானப்படையின் பணிப்பக  அதிகாரிகள், விமானப்படையின் ஏனைய அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42