நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' பட குறு முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

17 Mar, 2023 | 10:00 AM
image

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான நாக சைதன்யா தமிழில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மாநாடு' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கஸ்டடி'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த  திரைப்படத்தில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, சம்பத்ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

அரசியல் கள பின்னணியில் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசா சித்தூரி பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காட்சி துணுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாக சைதன்யாவின் கதாபாத்திரமும், தோற்றமும், சண்டை காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் அரவிந்த்சாமி, சரத்குமார் ஆகியோரின் கதாபாத்திரமும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தின் இறுதியில் 'கஸ்டடி' திரைப்படம் மே மாதம் 12ஆம் திகதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்'...

2023-03-29 13:17:18
news-image

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'சொப்பன சுந்தரி'

2023-03-28 16:21:16
news-image

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

2023-03-28 16:05:57
news-image

பிரஜின் நடிக்கும் ஃ (அக்கு) படத்தின்...

2023-03-28 16:05:32
news-image

‘தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' பட முன்னோட்டம்

2023-03-28 16:07:01
news-image

பிரபல சிங்கள பாடகர் பேராசிரியர் சனத்...

2023-03-28 12:14:23
news-image

அமீர் - ராசி இல்லாத ராஜாவாகிறாரா..?!

2023-03-27 12:23:10
news-image

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு...

2023-03-27 12:22:51
news-image

உலக தமிழர்களின் கவனம் ஈர்க்கும் 'யாத்திசை'

2023-03-27 11:23:15
news-image

காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' வெளியீட்டு திகதி...

2023-03-27 11:22:33
news-image

குத்தாட்ட சாதனை படைத்த சாயிஷா

2023-03-27 11:21:41
news-image

துவிச்சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாரான...

2023-03-27 11:06:14