(நெவில் அன்தனி)
இலங்கையில் மிகவும் பழைமை வாய்ந்த கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாடசாலைகளான முறையே புனித பெனடிக்ற் கல்லூரிகும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது வருடாந்த கார்ட்மன் கிண்ணத்துக்கான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அருட்சகோதரர் லூக் கேடயத்துக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும்.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்ற போதிலும் புனித பெனடிக்ற் - வெஸ்லி அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு கல்லூரிகளினதும் விளையாட்டுத்துறை வரலாற்றையும் சகோதரத்துவத்தின் பகிரப்பட்ட பிணைப்புகளையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
இந்த கிரிக்கெட் போட்டி விண்ணுலகில் நிச்சயிக்கப்பட்டதாகவும் அதில் மாபெரும் கிரிக்கெட் போட்டி என்ற பெயருக்கு இடம் இல்லை எனவும் இரண்டு கல்லூரிகளினதும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
பொதுவாக மாபெரும் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் கூத்தாட்டம், கொண்டாட்டம், வாகனங்களின் அணிவகுப்பு என பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால், இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கல்லூரிகளான புனித பெனடிக்ற், வெஸ்லி ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி சகோதரத்துவம், நட்புறவு, சிறந்த புரிந்துணர்வு போன்ற நற்பண்புகளை பிரதிபலிக்கும் போட்டியாக அமைவது சிறப்பம்சம் ஆகும்.
இந்த இரண்டு கல்லூரிகளும் 1896இல் முதல் தடவையாக கிரிக்கெட் அரங்கில் சந்தித்துக்கொண்டன. எனவே 127 வருட பாரம்பரிய உறவுகளை நினைவுகூறும் வகையில் இந்த வருட போட்டி அமையவுள்ளது.
2021இலும் 2022இலும் விளையாடப்பட்ட இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 2 நாள் போட்டியில் எந்த அணியும் முழுமையான வெற்றியை பெறவில்லை.
இதேவேளை, கொவிட் - 19 காரணமாக 2021இல் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடைபெற்றபோது புனித பெனடிக்ற் வெற்றிபெற்று அருட்சகோதரர் லூக் கேடயத்தை சுவீகரித்தது.
புனித பெனடிக்ற் அணி
புனித பெனடிக்ற் அணிக்கு 4ஆம் வருட வீரர் சமத் சத்துரிய அணித் தலைவராகவும் 3ஆம் வருட வீரர் ஷாருஜன் சண்முகநாதன் உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர்.
சுழல்பந்துவீச்சாளரான சத்துரிய 29 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 180 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
'லிட்ல் சங்கா' என அழைக்கப்படும் ஷாருஜன் அணியின் விக்கெட் காப்பாளராவார். 2 சதங்கள் 4 அரைச் சதங்களுடன் 697 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஷாருஜன் சண்முகநாதன் துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களை விட ஷெனல் சமரதுங்க (2 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 426 ஓட்டங்கள்), விதுனேத் வில்சன் (4அரைச் சதங்களுடன் 381 ஓட்டங்கள்), ஷெரன் கன்னங்கர (2 அரைச் சதங்களுடன் 275 ஓட்டங்கள்), மெவான் திசாநாயக்க (38 விக்கெட்கள்) ஆகியோர் அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
கோஜித்த ஹிம்சார, விஹர அத்தநாயக்க, அர்ஷான் ஜோசப், அக்ஷர் செல்வநாயகம், ஷெரன் திசாநாயக்க, தினத் செனில, கீனோத் பெரேரா, ஹரேன் ஒலகம, தெஹான் பிட்டார், ஒனேஷ் மைக்கல், மரியோ பெர்னாண்டோ ஆகியோரும் பென்ஸ் குழாத்தல் இடம்பெறுகின்றனர்.
வெஸ்லி அணி
வெஸ்லி அணிக்கு லினல் சுபசிங்க அணித் தலைவராகவும் திசுல யாப்பா உதவி அணித் தலைவராகவும் விளையாடுகின்றனர்.
இடதுகை துடுப்பாட்ட வீரரும் சுழல்பந்துவீச்சாளருமான லினல் சுபசிங்க அணியின் பிரதான வீரராகத் திகழ்கிறார். 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் 20க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள அவர், வெஸ்லியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதவி அணித் தலைவர் திசுல யாப்பா இடதுகை துடுப்பாட்ட வீரராவார். விக்கெட்காப்பாளரான யாப்பா இந்த வருடப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் வெகுவாக பிரகாசித்துள்ளார்.
அவர்களுடன் சனித்து அமரசிங்க, சாமத் கோமஸ், அஷான் இசிர, உவின் பெரேரா, தரங்க பெர்னாண்டோ, ஷக்கேஷ் மினோன், ரவிந்து சிகேரா, அனுக பஹன்சர, ரஷ்மிக்க அமரரட்ன, ஜேதன் வைமன், கினார சூரியஆராச்சி, நிலுபுல் லியனகே, யாபேஷ் ப்ளெசிங், கீத் கொரள, ப்ரனீத் நிம்ஷான் ஆகியோரும் வெஸ்லி கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
குறிப்பு:
இரண்டு அணிகளின் படங்களுக்கு
(பட உதவி: திபப்பரே.கொம்)
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM