(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மும்முனை ஒருநாள் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் தமது அணி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவர் ஷெவன் டெனியல் தெரிவித்தார்.
அபு தாபி நோக்கி புறப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர், 'இந்தத் தொடர்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார்.
19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மும்முனை தொடரில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றவுள்ளன.
'இந்த இரண்டு தொடர்களிலும் எமது அணி திறமையாக விளையாடும் என நம்புகின்றேன். அத்துடன் இந்தத் தொடர்களுக்காக நாங்கள் சிறந்த தயார் நிலையில் இருக்கின்றோம்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தொடர்களுக்கான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டோம். பாடசாலை மட்டப் போட்டிகளிலும் நாங்கள் அனைவரும் திறமையாக விளையாடியிருந்தோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்த 2 தொடர்களையும் எதிர்கொள்வோம்' என ஷெவன் டெனியல் குறிப்பிட்டார்.
மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரரான ஷெவன் டெனியல், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி வீரரான ட்ரவின் மெத்யூ, காலி றிச்மண்ட் கல்லூரி வீரரான மல்ஷ தருபதி ஆகிய மூவரும் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவசாலிகளாவர்.
இலங்கையில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் இந்த இரண்டு தொடர்களும் இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
இந்தத் தொடர்களில் பங்குபற்றவுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெறும் 15 வீரர்களில் 12 பேர், பயிற்றுநர்கள், அதிகாரிகள் சகிதம் அபு தாபி சென்றுள்ளனர்.
சினேத் ஜயவர்தன (றோயல்), மல்ஷ தருபதி (றிச்மண்ட்), தினுர கலுபஹன (காலி மஹிந்த) ஆகிய மூவருக்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட மும்முனை சர்வதேச ஒருநாள் தொடரில் பங்களாதேஷை மார்ச் 20ஆம், 26ஆம் திகதிகளிலும் ஆப்கானிஸ்தானை மார்ச் 22ஆம், 28ஆம் திகதிகளிலும் இலங்கை எதிர்த்தாடும். முதலாவது போட்டி அபு தாபி ஸய்யத் விளையாடரங்கிலும் மற்றைய போட்டிகள் டொலரன்ஸ் ஓவல் மைதானத்திலும் நடைபெறும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடர் ஏப்ரல் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் பயிற்றுநராக முன்னாள் இலங்கை வீரர் ஜெஹான் முபாரக் செயற்படுவார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்
ஷெவான் டெனியல (தலைவர்), ஹிருன் கப்புருபண்டார, ஹிரான் ஜயசுந்தர (மூவரும் மருதானை, புனித சூசையப்பர் கல்லூரி), ட்ரவீன் மெத்யூ (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி), மல்ஷா தருபதி (காலி, றிச்மண்ட் கல்லூரி), தினுர கலுபஹன (காலி, மஹிந்த கல்லூரி), சினேத் ஜயவர்தன (கொழும்பு, றோயல் கல்லூரி), விஹாஸ் தேவ்மிக்க (கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி), விஷேன் ஹலம்பகே (பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி), தீரக்க ரணதுங்க, மனுல குலரத்ன (இருவரும் கண்டி, திரித்துவ கல்லூரி), விஷ்வா லஹிரு (பாணந்துறை, ஸ்ரீ சுமங்கல கல்லூரி), துவிந்து ரணதுங்க (கொள்ளுப்பிட்டி, மஹநாம கல்லூரி), கருக்க சன்கேத் (வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலை), விஷ்வா ராஜபக்ச (வென்னப்புவை, புனித ஜோசவ் வாஸ் கல்லூரி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM