கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

16 Mar, 2023 | 03:32 PM
image

விரைவில் கோடை காலம் தொடங்கவிருக்கிறது. மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக அலைபேசி, கையடக்க கணினி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவதால்.., அவர்களது கண்களில் இயல்பாக இருக்க வேண்டிய நீர்த் தன்மை, புறச் சூழல் வெப்பம் காரணமாக குறைந்து, கண் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரியவர்களும் தொடர்ச்சியாக கணினிகளை பாவிப்பதால் அவர்களுக்கு கண்களில் வறட்சி ஏற்பட்டு, நோய் தொற்றுக்கு எளிதில் ஆளாக கூடிய நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கண்ணிலும் சிவந்திருத்தல், சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் அரிப்பு அல்லது வகைப்படுத்த இயலாத அசௌகரிய உணர்வு, வெளிச்சத்தை காணும் போது தடுமாற்றம்.. என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு கான்ஜுன்க்டிவிடீஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உணர்ந்து, உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இதன் போது கண்ணிமை படலத்தின் வெளிப்புறத்தில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படும். இந்த மெல்லிய சவ்வு பகுதியை மருத்துவர்கள் கான்ஜுன்டியா என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பின் போது இந்த மெல்லிய சவ்வு ஊடாக பாயும் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு எரிச்சலை உண்டாக்கும். இதனால் கண்கள் சிவந்து காணப்படுகிறது.

வைரஸ் தொற்று, பக்டீரியா தொற்று, ஒவ்வாமை போன்ற காரணங்களினால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சில பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தகைய பகுதிகளில் முழுமையான வளர்ச்சி ஏற்படாததன் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். இது வெகு சிலருக்கு மட்டுமே பார்வை திறனை பாதிக்கிறது. இருப்பினும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவர்களைச் சந்தித்தால் அவர்கள் இதற்காக பிரத்யேக மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

டொக்டர் ஷெர்லி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவை...

2023-03-28 17:09:25
news-image

தொடக்க நிலையிலான ஆட்டிசம் பாதிப்பிற்கு முழுமையாக...

2023-03-27 14:17:26
news-image

வாந்தி - Vomiting

2023-03-25 12:03:56
news-image

அறைகளில் மணமூட்டியை பயன்படுத்தலாமா..?

2023-03-24 15:29:53
news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01
news-image

ஸ்போண்டிலோஒர்த்ரைடீஸ் எனும் முதுகுத்தண்டு வீக்க பாதிப்பிற்குரிய...

2023-03-18 12:21:25
news-image

கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-16 15:32:11
news-image

இன்சுலினை ஆயுள் முழுதும் பயன்படுத்த வேண்டுமா...?

2023-03-15 14:52:57