'கழுவேத்தி மூர்க்கன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

16 Mar, 2023 | 03:31 PM
image

நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கழுவேத்தி மூர்க்கன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனுடன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'ராட்சசி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சை. கௌதம ராஜ் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.

இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த், சரத் லோகிதாஸ்வா, ராஜசிம்மன், 'யார்' கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

தமிழகத்தின் தென்பகுதிகளான ராமநாதபுரம், ராமேஸ்வரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் தலைப்பு மற்றும் தலைப்பிற்கான மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அருள் நிதியின் வித்தியாசமான.. ஆக்ரோஷமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37