புதிய உரிமையாளரிடம் கையளிப்பதற்காக இலங்கையர்கள் செலுத்தி வந்த கப்பல் ஒன்றை நியூஸிலாந்தின் வானுவாட்டு சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். 

20 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தக் கப்பலை புதிதாக ஒருவர் வாங்கியிருப்பதாகவும், அவரிடம் கையளிப்பதற்காகவே தாம் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்ததாகவும் இலங்கைச் சிப்பந்திகள் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

எனினும், குறித்த கப்பலின் முன்னாள் உரிமையாளர் யார் என்ற விபரத்தை சிப்பந்திகள் தெரிவிக்காததால் அந்தக் கப்பலை சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

குறித்த கப்பலை ஜப்பானில் இருந்து செலுத்தி வருவதாகவும், ஜேபிஓ காவா எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான போல் ஓக்டன் என்பவரே கப்பலை வாங்கியவர் என்றும் இலங்கைச் சிப்பந்திகள் கூறியுள்ளனர்.