அடோல்ப் ஹிட்லரினால் எழுதப்பட்ட அவரின் அனுபவ சரித்திர நூல் ஜேர்மனியில் அதிக பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

முதலாம் உலகப்போர்  1918 ஆம் ஆண்டு  முடிந்தப்பிறகு ஜேர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்த ஹிட்லர் . படிப்படியாக வளர்ந்து, தலைமை இடத்தை பிடித்தவராவார், அவர் அரசை எதிர்த்து 1923ஆம் ஆண்டு திடீர் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 

சிறையில் இருந்தபோது தான் பெற்ற அனுபவங்களை கொண்டு ‘மெயின் காம்ப்’ (மை ட்ரிகல் ) என்ற சுயசரிதை நூலை எழுதினார்.

ஹிட்லரின் அரசியல் நோக்கை விளக்கும் குறித்த புத்தகத்தின் முதற்பாகம் 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாம்  பாகம் 1926 இல் வெளியிடப்பட்டது. 1945ஆம் ஆண்டு வரை 1 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெயின் காம்ப் நூலின் 6ஆவது பதிப்பு அச்சிடப்படும் நிலையில், இரண்டு தொகுதிகள் கொண்ட இப்புத்தகம், ஜேர்மனியில் அதிகளவு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என அதன் பதிப்பாளர் தெரிவித்துள்ளார். என அந்நாட்டு வார இதழ் தகவல் பகிர்ந்துள்ளது.

 கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான புதிய உரை விளக்கத்துடன் கூடிய மெயின் காம்ப் புத்தகம் 35 வாரங்களில் 85 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 4 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிடப்பட்ட நிலையில் 85 ஆயிரம் நூல்கள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.