D3 - விமர்சனம்

Published By: Ponmalar

16 Mar, 2023 | 12:44 PM
image

தயாரிப்பு: பிமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்

நடிகர்கள்: பிரஜின், சார்லி, வித்யா பிரதீப், ராகுல் மாதவ், காயத்ரி யுவராஜ், மேத்யூ வர்கீஸ் மற்றும் பலர்.

இயக்கம்: பாலாஜி

மதிப்பீடு: 2.5 / 5

கதை: மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்து வெளிக்கொணரும் காவல் ஆய்வாளர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவம்.

குற்றாலம் எனும் ஊரில் D3 காவல் நிலையத்தில் ஆய்வாளராக கதையின் நாயகனான பிரஜின் பணி புரிகிறார்.  இவரது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியாகிறார்.

இதனை விசாரிக்க தொடங்கும் பிரஜினை மர்ம கும்பல் கடத்துகிறது. அதிலிருந்து அவர் தப்பினாரா? குற்றவாளியை கண்டறிந்து கைது செய்தாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதை.

காவல் ஆய்வாளர் விக்ரம் கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்தி தன் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் நடிகர் பிரஜின். வில்லனாக நடித்திருக்கும் ராகுல் மாதவ் குற்ற செயல்களில் ஈடுபடும் வைத்தியர் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

நாயகனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் இரண்டு காட்சிகளில் மட்டும் திரையில் தோன்றுவது அதிர்ச்சி. இருப்பினும் இந்த திரைப்படம் மூன்றாவது பாகம் என்றும், இப்படம் வெளியான பிறகு ஏனைய முதல் இரண்டு பாகங்கள் வெளியாகும் என்றும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

எனவே அந்த இரண்டு பாகத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப்பிற்கு அதிக காட்சிகள் இருக்கும் என நம்புவோம். 

ஒரே நாளில் நடைபெறும் சம்பவம் போல் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால்.. அன்றுடன் பணி ஓய்வு பெறும் காவலர் சார்லியின் குணச்சித்திர நடிப்பு ரசிகர்களை ஈர்க்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதை என்பதற்காக அடுத்தடுத்து தொடர் கொலைகள் நிகழ்வது சலிப்பை தருகிறது. முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் சண்டைக் காட்சி விறுவிறுப்பாக இல்லாமல் போரடிப்பது போல் படமாக்கப்பட்டிருப்பது இந்த திரைப்படத்தில் தான்.

கதைக்களம் குற்றாலம் என்றாலும் படம் முழுவதும் ஓரிடத்தில் கூட நீர்வீழ்ச்சியை  இடம்பெறாமல் காட்சிப்படுத்தியிருப்பது ஏமாற்றத்தை தருகிறது. படத்தில் இடம்பெறும் பயண காட்சிகள்... ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வைத் தருகிறது.

ஒளிப்பதிவு, பின்னணியிசை, படத்தொகுப்பு இவை அனைத்தும் இன்னும் கூர்மையாக்கப்பட்டிருந்தால்.. அனைத்து தரப்பினரும் பாராட்டக்கூடிய தரமான சஸ்பென்ஸ் திரில்லர் படைப்பாக D3 உருவாகி இருக்கும்.

D 3 - கசங்கிய சீருடை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்'...

2023-03-29 13:17:18
news-image

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'சொப்பன சுந்தரி'

2023-03-28 16:21:16
news-image

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

2023-03-28 16:05:57
news-image

பிரஜின் நடிக்கும் ஃ (அக்கு) படத்தின்...

2023-03-28 16:05:32
news-image

‘தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' பட முன்னோட்டம்

2023-03-28 16:07:01
news-image

பிரபல சிங்கள பாடகர் பேராசிரியர் சனத்...

2023-03-28 12:14:23
news-image

அமீர் - ராசி இல்லாத ராஜாவாகிறாரா..?!

2023-03-27 12:23:10
news-image

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு...

2023-03-27 12:22:51
news-image

உலக தமிழர்களின் கவனம் ஈர்க்கும் 'யாத்திசை'

2023-03-27 11:23:15
news-image

காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' வெளியீட்டு திகதி...

2023-03-27 11:22:33
news-image

குத்தாட்ட சாதனை படைத்த சாயிஷா

2023-03-27 11:21:41
news-image

துவிச்சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாரான...

2023-03-27 11:06:14