பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், சூரிய சக்தி மின் பிறப்பாக்கித் தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. 

இவ்வருடத்தில், நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம் எழுந்திருக்கும் நிலையில், ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக இந்த உபகரணத் தொகுதியைப் பொருத்தியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொகுதி மூலம், சிறிகொத்தவின் முழு மின் பயன்பாடும் சூரிய சக்தியில் இருந்தே பெறப்படவிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.