எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஷாரூக் கானின் 'ஜவான்'

Published By: Ponmalar

16 Mar, 2023 | 12:18 PM
image

'பதான்' படத்தின் மூலம் பொலிவுட் திரையுலகின் வணிக சந்தையை தனியொருவனாக மீட்டெடுத்திருக்கும் 'பொலிவுட் பாட்ஷா' ஷாரூக் கான் நடிப்பில் தயாராகி வரும் 'ஜவான்' திரைப்படம், ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்', ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி இயக்கத்தில் தயாராகும் முதல் ஹிந்தி திரைப்படம் 'ஜவான்'.

இதில் பொலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, சுனில் குரோவர், பிரியாமணி உள்ளிட்ட பலர்  நடித்திருக்கிறார்கள்.

ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக ஷாருக்கான் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். விஜய்- அவரது தந்தையும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'சுக்ரன்', 'பந்தயம்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே சிறப்பு தோற்றத்திலும், கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

இதன் பிறகு அவர் நண்பரும், இயக்குநருமான அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் 'ஜவான்' எனும் இந்தப் படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் 15 முதல் 20 நிமிடங்கள் வரையிலான இடம்பெறும் காட்சியில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விஜயின் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'ஜவான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

'ஜவான்' திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானின் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்பதும், இப்படத்தில் வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும், பிரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான் என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.

இதனிடையே எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் திகதியன்று தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'ஜவான்' திரைப்படம், தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என இந்திய மொழிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்'...

2023-03-29 13:17:18
news-image

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'சொப்பன சுந்தரி'

2023-03-28 16:21:16
news-image

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

2023-03-28 16:05:57
news-image

பிரஜின் நடிக்கும் ஃ (அக்கு) படத்தின்...

2023-03-28 16:05:32
news-image

‘தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' பட முன்னோட்டம்

2023-03-28 16:07:01
news-image

பிரபல சிங்கள பாடகர் பேராசிரியர் சனத்...

2023-03-28 12:14:23
news-image

அமீர் - ராசி இல்லாத ராஜாவாகிறாரா..?!

2023-03-27 12:23:10
news-image

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு...

2023-03-27 12:22:51
news-image

உலக தமிழர்களின் கவனம் ஈர்க்கும் 'யாத்திசை'

2023-03-27 11:23:15
news-image

காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' வெளியீட்டு திகதி...

2023-03-27 11:22:33
news-image

குத்தாட்ட சாதனை படைத்த சாயிஷா

2023-03-27 11:21:41
news-image

துவிச்சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாரான...

2023-03-27 11:06:14