குடி மகான் - விமர்சனம்

Published By: Ponmalar

16 Mar, 2023 | 12:18 PM
image

தயாரிப்பு: சினாரியோ மீடியா வொர்க்ஸ்

நடிகர்கள்: விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் மற்றும் பலர்.

இயக்கம்: என். பிரகாஷ்

மதிப்பீடு: 2.5 / 5

கதை: அரிய வகை நோயால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களும், அதன் எதிர் வினைகளும்...

கதையின் நாயகனான விஜய் சிவன் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பண சேவை இயந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியினைச் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடன் அவரது தந்தை, மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வாழ்கிறார்.

இவருக்கு துரித வகை உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது குளிர்பானங்களை அருந்தினாலோ.. ஒருவகை மயக்க நிலைக்கு செல்கிறார். இதன்போது அவர் மது அருந்துபவர்களை போல் அலப்பறை செய்கிறார். ஆனால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் நண்பர்கள், மனைவி, தந்தை ஆகியோர் இவர் மது அருந்திவிட்டு தான் இப்படி நடந்துகொள்வதாக நம்புகிறார்கள். ஆனால் இவர்.., அவர்களிடம் நான் மது அருந்தவில்லை என உறுதியாக கூறுகிறார்.

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும்போது.. மயக்க நிலை ஏற்பட.. 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாயை மாற்றி நிரப்புகிறார். இந்த ஏடிஎம்மை பயன்படுத்தும் பயனாளிகள்.., 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வருவதை கண்டு, மகிழ்ச்சி அடைந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் வங்கிக்கும், இந்த பணியை மேற்கொண்டிருக்கும் தனியார் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாயகனுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. மீண்டும் பணி கிடைக்க வேண்டுமென்றால், அவருடைய தவறால் ஏற்பட்ட லட்சக்கணக்கான இழப்பீட்டை அவர் மீண்டும் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தை சார்ந்த நாயகனுக்கு இலட்சக்கணக்கிலான பணத்தை மீட்டெடுப்பது என்பது இயலாத காரியம். இதனால் நண்பர்களின் உதவியுடன் அந்த தருணங்களில் ஏடிஎம்மிலிருந்து யார் பணம் எடுத்தார்கள்? என்பதனை தெரிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கூடுதலாக பெற்ற தொகையை வசூல் செய்ய திட்டமிடுகிறார். இதனை அவரால் செய்ய முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் திரைக்கதை.

திரைக்கதையில் சில கிளை கதைகளை  உருவாக்கி, அதனை நகைச்சுவை காட்சிகளாக்கி.. பிரதான கதையுடன் நேர்த்தியாகவும், சாதுரியமாகவும் இணைத்து ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர்.

மது அருந்தாமல் போதையில் தள்ளாடும் கதாநாயகனின் கதாபாத்திரம் சிறப்பு. அதற்கு நடிகர் விஜய் சிவன் பொருத்தமாக இருக்கிறார். நடுத்தர குடும்பத் தலைவனாகவும் விஜய் சிவன் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் நடிகை சாந்தினி தமிழரசனும், தந்தையாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவத்தியின் அலப்பறையும் நன்றாக இருக்கிறது. படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்தின் இயல்பை உணர்ந்து நடித்து சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

வில்லன் என ஒருவரை காட்டியிருந்தாலும்.. பணத்திற்காக சிறிய அளவில் ஏமாற்ற தயாராக இருக்கும் எம்மிடையே வாழும் மக்களில் சிலரை அடையாளப்படுத்தி இருப்பதும்.. அவர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க நாயகன் அவர்களுக்கு நெருக்கடி தருவதும் சுவராசியமாக இருக்கிறது. பொது மக்கள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் போது.., அதற்கான நோக்கத்தை பொதுநலத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதனை போகிற போக்கில் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணியிசை அனைத்தும் வணிகத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. இன்றைய இணைய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையிலான புதுவித கொமடி ட்ரெண்டுடன் வருகை தந்திருக்கும் குடி மகானை தாராளமாக வரவேற்கலாம்.

குடிமகான் - சிரிக்கும் புத்தர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்'...

2023-03-29 13:17:18
news-image

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'சொப்பன சுந்தரி'

2023-03-28 16:21:16
news-image

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

2023-03-28 16:05:57
news-image

பிரஜின் நடிக்கும் ஃ (அக்கு) படத்தின்...

2023-03-28 16:05:32
news-image

‘தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' பட முன்னோட்டம்

2023-03-28 16:07:01
news-image

பிரபல சிங்கள பாடகர் பேராசிரியர் சனத்...

2023-03-28 12:14:23
news-image

அமீர் - ராசி இல்லாத ராஜாவாகிறாரா..?!

2023-03-27 12:23:10
news-image

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு...

2023-03-27 12:22:51
news-image

உலக தமிழர்களின் கவனம் ஈர்க்கும் 'யாத்திசை'

2023-03-27 11:23:15
news-image

காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' வெளியீட்டு திகதி...

2023-03-27 11:22:33
news-image

குத்தாட்ட சாதனை படைத்த சாயிஷா

2023-03-27 11:21:41
news-image

துவிச்சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாரான...

2023-03-27 11:06:14