கல்லூரி அனுமதி கடிதம் போலி:  கனடாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கும் 700 இந்திய மாணவர்கள்

Published By: Sethu

16 Mar, 2023 | 11:53 AM
image

சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

கனேடிய விசா பெறுவதற்காக, கனேடிய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட கடிதங்கள் போலியானவை எனத் தெரியவந்தமையே இதற்கான காரணம். 

கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் இம்மாணவர்களுக்கு நாடு கடத்தல்; அறிவித்தலை வழங்கியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இம்மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக 2018, 2019 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்கு சென்றவர்கள்.

இதற்காக மேற்படி முகவருக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்லூரி அனுமதிக்கான கட்டணம் உட்பட 16 முதல் 20 லட்சம் இந்திய ரூபா வரை அவர்கள் வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. டொரண்டோவிலுள்ள 'ஹம்பர் கொலேஜ்' எனும் கல்லூரியில் அனுமதி பெற்றமைக்கான கடிதம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், டொரண்டோ நகரை இம்மாணவர்கள் சென்றடைந்த பின்னர், இம்மாணவர்களைத் தொடர்புகொண்ட மேற்படி முகவர், அக்கல்லூரியில் அனைத்து ஆசனங்களும்  தற்போது நிறைந்துள்ளதாகவும்  அடுத்த தவணைக்காக அவர்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டும் அல்லது வேறு கல்வி நிறுவகங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். கல்லூரி அனுமதிக்காக அறவிடப்பட்ட பணத்தை அவர் திருப்பிக்கொடுத்துள்ளார். இதனால் அவர் நியாயமானவர் என மாணவர்கள் நம்பியுள்ளனர்.

பின்னர், கிடைத்த வேறு கல்வி நிறுவகங்களில் 2 வருட டிப்ளோமா கற்கை நெறிகளை இம்மாணவர்கள் பயின்றுள்ளனர். அதன்பின் வேலைக்கான அனுமதிப்பத்திர்ததையும் இவர்கள் பெற்றுக்கொண்டனர். 

கனடாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான தகைமை கிடைத்துவிட்டதாக நம்பியவுடன், இதற்காக கனேடிய குடிவரவு, குடியகல்வி திணைக்களத்திடம் சகல ஆவணங்களையும் இம்மாணவர்கள் கையளித்தனர்.

அதையடுத்து, மாணவர்களின் ஆவணங்களை ஆராய்ந்த, கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள், கனடாவுக்கு வருவதற்கான விசா பெறுவதற்காக வழங்கப்பட்ட கல்லூ}p அனுமதிக்கடிதங்கள் போலியானவை என்பது தெரியவந்தது என மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அனைத்து மாணவர்களுக்கு விசாரணை வாய்ப்பொன்று வழங்கப்பட்ட பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் நாடு கடத்தல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி மாணவர் கூறியுள்ளார்.

முகவர் ஒருவருக்கு ஊடாக அல்லாமல், சுயமாகவே மாணவர்கள் விசா விண்ணப்பங்களை செய்வதாக காண்பிப்பதற்காக அவ்விண்ணப்பங்களில் குறித்த முகவர் கையெழுத்திடுவதை தவிர்த்தார் எனவும் அம்மாணவர் கூறியுள்ளார்.

தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என மாணவர்கள் கூறுவதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வில்லை. குறித்த முகவரே அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தார் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லாதமையே இதற்கான காரணம். 

அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்காமல் அம்மாணவர்களை கனடாவுக்குள் நுழைய அனுமதித்த விசா அதிகாரிகள், மற்றும் விமானநிலைய அதிகாரிகளால் ஏற்பட்ட தவறுகளையும் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவல்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இம்மாணவர்களுக்கு தற்போதுள்ள ஒரேயோரு வாய்ப்பு நீதிமன்றத்தை நாடுவதாகும். பொதுவாக கனேடிய சட்டத்தரணிகளின் சேவையைப் பெறுவது செலவு மிகுந்ததாக கருதப்படுவதுடன், வழக்கு நடவடிக்கைள் முடிவடைய 3 அல்லது 4 வருடங்கள் செல்லாம் எனவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிகமோசமான சூழ்நிலைகளிற்கு தயாராகுங்கள் - பாதுகாப்பு...

2023-06-01 16:27:18
news-image

அவுஸ்திரேலியாவின் மிகவும் கௌரவிக்கப்பட்ட இராணுவவீரர் ஆப்கானில்...

2023-06-01 13:12:33
news-image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உப...

2023-06-01 11:30:40
news-image

சீமான் உள்பட நாம் தமிழர் நிர்வாகிகளின்...

2023-06-01 10:01:18
news-image

இலங்கையிலிருந்து படகில் கொண்டுசெல்லப்பட்ட கடத்தல் தங்கம்...

2023-06-01 10:10:45
news-image

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை...

2023-05-31 20:24:01
news-image

சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது

2023-05-31 15:35:11
news-image

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?...

2023-05-31 14:17:11
news-image

மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை...

2023-05-31 13:06:57
news-image

ரயானா உட்பட ஏஎக்ஸ்2 விண்வெளியாளர்கள் பூமிக்குத்...

2023-05-31 13:15:22
news-image

குடியேற்றவாசிகளிற்கு எதிரான பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்தார்...

2023-05-31 12:39:20
news-image

வட கொரியா ஏவிய உளவுச் செய்மதி...

2023-05-31 10:48:09